மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.
இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்ச்சி பட்டியல் வெளியாகி நீண்ட நாட்களாகியும் பணிநியமன கலந்தாய்வு நடைபெறவில்லை.
இதனால் தேர்ச்சி பெற்றோர் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர். பள்ளிகளில் கல்விப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
பணிநியமனம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது "காலிப்பணியிட விபரங்கள் முழுமையாக பெறப்பட்டு கலந்தாய்வுக்கு தயாராக இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்ததும், நிதித்துறை செயலரின் ஒப்புதலைப் பெற்று பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்" என்று தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக