திருடு போன மொபைல் போன்களைப் பற்றி காவல்துறையில் புகார் அளித்துவிட்டு அந்தப் புகார் படிவத்துடன் Central Equipment Identity Register என்ற அரசின் இணையதளத்தில் பதிவு செய்து நமது மொபைலை நாமே ட்ராக் செய்துகொள்ளலாம்
ஸ்மார்ட்போன்கள் பெருகிவிட்ட இன்றைய காலத்தில், அந்த போன்கள் திருடு போவதும் சகஜமாகிவிட்டது. தற்போது அதற்கான தீர்வை அளிக்கத் தொலைத் தொடர்பு அமைச்சகம் முன் வந்துள்ளது. தொலைந்த அல்லது திருடு போன மொபைல் போன்களைப் பற்றி காவல்துறையில் புகார் அளித்துவிட்டு, அந்த புகார் படிவத்துடன் Central Equipment Identity Register என்ற அரசின் இணையதளத்தில் பதிவு செய்து நமது மொபைலை நாமே ட்ராக் செய்துகொள்ளலாம் என ஏற்கெனவே அறிவித்திருக்கிறது தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம்.
இந்தத் திட்டத்தை டெல்லியில் அறிமுகப்படுத்தி அதைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு செயலாளர் பேசியபோது, ``தற்போது டெல்லியில் உள்ளவர்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். திருடப்பட்ட மொபைலைப் பற்றி காவல்துறையில் புகார் கொடுத்து, அந்தப் படிவம் மற்றும் உங்கள் அடையாள அட்டையைச் சேர்த்து பதிவேற்றம் செய்து மொபைலை நீங்களே ப்ளாக் அல்லது அன்ப்ளாக் செய்யலாம்" எனக் கூறியுள்ளார்.
அந்த இணையதளத்தின்படி திருடப்பட்ட மொபைலின் IMEI நம்பர், உங்கள் மொபைல் நம்பர், தொலைந்த இடம், தேதி, காவல்துறை புகார் படிவம் மற்றும் உங்கள் அடையாள அட்டை ஆகியவற்றைப் பதிவேற்றுவதன் மூலம் உங்கள் மொபைலை திருடியவர் எந்த வகையிலும் உபயோகிப்பதிலிருந்து தடுக்க முடியும். மேலும், அந்த மொபைலே எங்கேயாவது பயன்படுத்தப்பட்டால் அதை ட்ராக் செய்யவும் முடியும்.
தற்போது டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் மட்டும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வசதி விரைவில் இந்தியா முழுவதும் விரிவு படுத்தப்படவிருக்கிறது.
இணையதள முகவரி: https://ceir.gov.in/Home/index.jsp
இணையதள முகவரி: https://ceir.gov.in/Home/index.jsp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக