இந்த வலைப்பதிவில் தேடு

வாட்ஸ்அப் பயனாளர்களே... இந்த சின்ன 'ட்ரிக்' உங்கள் போனை ஹேக்கர்களிடமிருந்து காப்பாற்றும்!

செவ்வாய், 28 ஜனவரி, 2020



வாட்ஸ்அப் மூலமாக சர்வதேச அளவில் பெரும் தகவல் திருட்டுகளை ஹேக்கர்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் சில பாதுகாப்பு மற்றும் ப்ரைவஸி கோளாறுகள் இருக்கத்தான் செய்கின்றன. முக்கியப் பிரபலங்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரையில் ஹேக்கர்களின் கைவரிசைக்கு யாரும் விதிவிலக்கு அல்ல.

பிரபலங்களின் தனிப்பட்ட தகவல்கள் உட்பட பொதுமக்களின் வங்கி, பண விவரங்கள் வரையில் அனைத்தையும் வாட்ஸ்அப் மூலம் ஹேக் செய்யப்படுகிறது. இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் சுமார் 1.6 பில்லியனுக்கு அதிகமானோர் சிக்கலில் உள்ளனர். ஆனால், வாட்ஸ்அப் பயன்படுத்தும் நீங்கள் உங்களுக்கான பாதுகாப்பை இந்த ஒரு சின்ன செயலால் உறுதி செய்ய முடியும்.

வாட்ஸ்அப் செயலியை ஓப்பன் செய்யுங்கள். Settings -> Account -> Two-Step Verification க்ளிக் செய்து Enable ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர் 6 இலக்க PIN உருவாக்கவும். இதன் பின்னர் உங்களது மெயில் உடன் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் இணைத்தால் பயனுள்ளதாய் இருக்கும்.

காரணம், உங்களது வாட்ஸ்அப் கணக்கை ஹேக்கர் ஒருவர் ஹேக் செய்யும் போது நீங்கள் உருவாக்கிய 6 இலக்க PIN எண் ஹேக்கருக்கு ஒரு தடையாக உருவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent