இந்த வலைப்பதிவில் தேடு

PM Shri Narendra Modi Speech - Pariksha Pe Charcha 2020 - Live Direct Link

ஞாயிறு, 19 ஜனவரி, 2020









- பாரதப் பிரதமர் உரையினை அறிக்கையாக அளிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


மாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடனும் பயமின்றியும் எழுதும் வகையில் Pariksha Pe Charcha 2020 எனும் நிகழ்ச்சி மூலம் பாரதப் பிரதமர் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் 20.01.2020 அன்று புதுடில்லியில் உள்ள Talkatora ஸ்டேடியத்தில் உரையாற்றவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்ததுக்கிணங்க ,  கடிதம் மூலம் பள்ளி மாணாக்கர்கள் கட்டுரைகள் இணையதள வழியில் சமர்ப்பித்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.







 இதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 20.01.2020 அன்று புதுடில்லியில் உள்ள Talkatora ஸ்டேடியத்தில் பாரதப் பிரதமர் அவர்களின் உரையை தூர்தர்ஷன் மற்றும் வானொலி உட்பட அனைத்து அரசு ஊடகங்களின் மூலம் நேரடியாக ஒளிப்பரப்பப்பட உள்ளது . இதனை பிரதம மந்திரி அலுவலக இணையதளங்கள் பற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் இயங்கும் நேரலையாக Youtube Channel of MHRD , Mygov. in , Facebook Live and Swilyamprabha Channels of MIIRD மூலமும் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .



 1 . இதன் தொடர்ச்சியாக , 20.01.2020 அன்று காலை 10 . 30 மணியளவில் துவங்கப்பட இருக்கும் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களின் உரையை அனைத்துப் பள்ளிகளிலும் காண்பதற்கும் கேட்பகற்கும் முன்னதாக ஏற்பாடுகள் செய்யவும் , இந்நிகழ்ச்சி - சார்ந்து  Pariksha Pe Charcha 2020 தொடர்பான படங்களையும் துண்டுப்பிரசுரங்களையும் பள்ளியின் தகவல் பலகை மற்றும் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தி இந்நிகழ்ச்சியை அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யவும் ,

2 .இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களிடம் தங்கள் வினாக்களை நேரடியாக கேட்கவும் அனுமதிக்கப்படுவர் என்பதாலும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்கள் இந்நிகழ்ச்சியினை தவறாது காணும் பொருட்டும் , கேட்கும் பொருட்டும் தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் இதர சாதனங்கள் தயார் நிலையில் வைத்திடவும் அதற்கான செலவினங்களை மேற்கொள்ள Samagra Shiksha வின் திட்ட நிதியினை பயன்படுத்தவும்.

3 . இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்த மாணாக்கர் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பின்னூட்டம் ( Feedback ) போன்ற தகவல்களை உள்ளடக்கிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றைத் தொகுத்து அறிக்கையாக அளிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் சற்றறிக்கை மூலம் தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
     
            - இயக்குநர் ,  பள்ளிக்கல்வித்துறை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent