பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
திருக்குறள்
அதிகாரம்:மெய்யுணர்தல்
திருக்குறள்:351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
விளக்கம்:
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
பழமொழி
A contended mind is a continual feet
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
இரண்டொழுக்க பண்புகள்
1. இப்புது வருடத்தில் மதிப்பு மிகு மாணவனாக இருப்பதே என் இலட்சியம்.
2. இந்த இலட்சியம் நிறைவேற இந்த வருடம் முழுவதும் ஊக்கமாக செயல்படுவேன்.
பொன்மொழி
துவண்டு விடாதீர்கள்.
முயன்று கொண்டே இருங்கள்.
தோல்வியிடம் உங்களை நீங்களே விட்டுக் கொடுக்காதீர்கள்.
- அப்துல் கலாம்.
பொது அறிவு
1. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார்?
கெப்ளர்
2.துருப்பிடித்த கோள் என்றழைக்கப்படும் கோள் எது?
செவ்வாய்
English words & meanings
* Leprology – study of leprosy. தொழு நோய் ஏற்பட காரணம் மற்றும் மருத்துவம் குறித்த படிப்பு.
* Lantern - a lamp inside a glass cage, கண்ணாடிக்கூட்டு விளக்கு.
ஆரோக்ய வாழ்வு
தேங்காய்ப்பாலில் வைட்டமின்கள் சி,இ,பி1, பி3 ,பி5, பி6 சத்துக்கள் உள்ளன. மேலும் இரும்பு ,சோடியம், கால்சியம் ,மக்னீசியம், மாங்கனீசு, செலினியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் நிறைந்து இருக்கின்றது.
Some important abbreviations for students
e.g. - exempli gratia ( for example)
etc. - et cetera (and other things)
நீதிக்கதை
தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்
உதவியின் சிறப்பு
குறள் :
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
விளக்கம் :
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
கதை :
ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது.
அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது.
சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள்.
ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.
அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.
முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான்.
இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர்.
சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான்.
இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.
நீதி :
ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.
திங்கள்
தமிழ்
தூய தமிழ் சொற்கள் அறிவோம்
பகிரங்கம்- வெளிப்படை
பரிகாசம் -நகையாடல்
பத்தினி- கற்பணங்கு
பரீட்சை -தேர்வு
பந்துக்கள்- உறவினர்கள்
இன்றைய செய்திகள்
06.01.20
★ “நீட் தேர்வு கட்டாயம் என்று மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
★பாகிஸ்தானின் நான்கானா சாஹிப் குருத்வாராவில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
★பிஹார் மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்த பணிகள் மே 15-ம் தேதி முதல் தொடங்கி மே 28-ம் தேதி வரை நடக்கும் என்று துணை முதல்வர் சுஷில் குமார் மோடி திட்டவட்டமாக அறிவித்தார்.
★''மனிதனுக்கு இன்றைய தேவை வேலைகள், சுகாதாரம், கல்விதானே தவிர முடிவற்ற போர் அல்ல'' என நியூயார்க்கில் நூற்றுக்கணக்கான போர் எதிர்ப்பாளர்கள் திரண்டு ஆர்பாட்டம்.
★கேப்டவுனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரு இன்னிங்சில் 5 கேட்சுகள் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
★அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் இன்று அறிவித்துள்ளார்.
Today's Headlines
🌸 The Government of Tamil Nadu has filed a petition in the Supreme Court. The petition says "NEET has to be cancelled by the Medical Council"
🌸 The Indian Foreign Ministry has condemned the attack on Pakistan's Nankana Sahib Gurudwara.
🌸Bihar Deputy Chief Minister Sushil Kumar Modi has announced that the work on the National Population Register in Bihar will begin on May 15 and continue till May 28.
🌸 Hundreds of anti-war protesters in New York rallied against the war with the slogan "What man needs today is jobs, health and education, not an endless war.”
🌸 In the 2nd Test between England and South Africa at Cape Town, England's all-rounder Ben Stokes holds the record for the most catches ,in an innings of 5 catches ,in 142 years.
🌸 Indian all-rounder Irfan Pathan ,announced his retirement from all forms of cricket , today.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Super
பதிலளிநீக்கு