இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 11.01.2020

சனி, 11 ஜனவரி, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்



திருக்குறள்


அதிகாரம்:மெய்யுணர்தல்

திருக்குறள்:356

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.


விளக்கம்:

பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

பழமொழி

He who sows thorns will never reap grapes

 விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?

இரண்டொழுக்க பண்புகள்

1. இப்புது வருடத்தில் மதிப்பு மிகு மாணவனாக இருப்பதே என் இலட்சியம்.

 2. இந்த இலட்சியம் நிறைவேற இந்த வருடம் முழுவதும் ஊக்கமாக செயல்படுவேன்.

பொன்மொழி

ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணமே நம் பிம்பமாக காட்சிப்படுகிறது.

------எட்வின் லாண்டு


பொது அறிவு

1.உலக அளவில் விவசாயத் துறையில் சாதனை புரியும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் விருது எது?

போர்லாக் விருது (அமெரிக்க விவசாய விஞ்ஞானியான நார்மன் போர்லாக் என்பவரின் நினைவாக வழங்கப்படுகிறது)

2. 'பசுமைப் புரட்சியின் தந்தை' என அழைக்கப்படுபவர் யார்?

நார்மன் எர்னஸ்ட் போர்லாக்.




 3. போர்லாக் பெற்றுள்ள விருதுகள் யாவை?

அமைதிக்கான நோபல் பரிசு(1970)    விடுதலைக்கான அமெரிக்க தங்கப்பதக்கம்   அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம்  இந்திய பத்மவிபூஷன் விருது.

English words & meanings

quadrangular - objects having four angles, நாற்கரம்,

Quailery - A place where quails are kept, காடை பண்ணை

ஆரோக்ய வாழ்வு

 ராகிமாவு, முந்திரி, பாதாம் ஆகியவற்றை வறுத்து , அரைத்து அதனை பாலுடன் கலந்து நாட்டு சர்க்கரை போட்டு குழந்தைகளுக்கு தேர்வு நேரத்தில் குடிக்கக் கொடுத்தால் சோர்வு ஏற்படாது.

Some important  abbreviations for students

Mt. - Mountain.

 Rd. - Road

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்


கர்வம் கொண்ட மயில்

குறள் :
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

விளக்கம் :
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

கதை :
ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ, மயிலே இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும்.

ஆனால் அந்த குயிலை பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு என்றது.

இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள்.

நீதி :
தனக்கு தெரிந்ததை வைத்து மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது.

இன்றைய செய்திகள்

11.01.20

◆பொங்கல் திருநாளை புகையில்லாப் பொங்கலாகக் கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

◆மருந்து நிறுவனங்களிடம் லஞ்சமாகப் பொருட்களைப் பெற்ற மருத்துவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

◆குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.15,000 வழங்கும் 'தாய்மடி' (அம்மா வொடி) திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

◆அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க வலியுறுத்தி நியூயார்க்கில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி சென்றனர்.

◆ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுப் போட்டியில், அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

◆மலேசிய மாஸ்டா்ஸ் பாட்மிண்டன் சூப்பா் 500 போட்டியின் காலிறுதிக்கு பி.வி.சிந்து, சாய்னா நெவால் தகுதி பெற்றுள்ளனா்.

Today's Headlines

🌸 The School Education department  advised the students to celebrate Pongal as a smokeless pongal.

 🌸 Madras High Court has ordered the Central Government and Medical Council to respond to what action has been taken against doctors who have taken bribes from pharmaceutical companies.

 🌸 Andhra Pradesh chief minister Jaganmohan Reddy has launched 'Thaimadi' (Amma wodi) the scheme which offer Rs 15000  for mothers sending their children to school every year.

 🌸 Hundreds of people marched in New York to stressdown tensions between US and Iran.

 🌸 American player Serena Williams won the 2nd round of the Auckland Classic Tennis Tournament.  Shee then advanced to the quarterfinals.

 🌸 PV Sindhu and Saina Nehwal were qualified for the quarter finals of the Malaysian Masters Badminton Super 500.

Prepared by
Covai women ICT_போதிமரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent