இந்த வலைப்பதிவில் தேடு

SPD - தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இடைக்கால மிகை ஊதியம் வழங்கிட அரசாணை வெளியீடு.

செவ்வாய், 21 ஜனவரி, 2020




தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இடைக்கால மிகை ஊதியம் ரூ . 1000 / - ( ரூபாய் ஆயிரம் மட்டும் ) பொங்கல் விழாவிற்கு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி வழங்கி வரும் சிறப்புப் பயிற்றுநர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் , தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சுப் பயிற்சியாளர்களாக உள்ள 2114 தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணிபுரியும் பணியாளர்களுக்கும் விதிமுறைகளின் படி இடைக்கால மிக ஊதியமாக ரூ . 1000 / - ஊக்கப்படுத்தும் வகையில் MMER நிதியிலிருந்து வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்


 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent