இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து - இயக்குநரின் செயல்முறைகள்!

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020



தொடக்கக் கல்வி -உதவி பெறும் பள்ளிகள் - பட்டதாரிக் கல்வித்தகுதியுடன் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் நிர்வாகத்தால் 11.07.1995 முதல் 19.051998 முடிய நியமனம் செய்யப்பட்டவர்களில் சில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து -இயக்குநரின் செயல்முறைகள்


1 ) பட்டதாரிக் கல்வித்தகுதியுடன் , இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , ஒரு மாத கால குழந்தை மனநலப் பயிற்சி முடிக்கப்பட்ட நாளுக்கு மறு நாள் முதல் ஒப்புதல் அளிக்கப்பட்டதை எதிர்த்தும் , தங்களுக்கு நியமன நாள் முதல் ஒப்புதல் அளித்திடக் கோரியும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றனர் . இது அரசாணை ( நிலை ) எண் 155 பள்ளிக் கல்வித்துறை நாள் . 03 . 10 . 2002 க்கு மாறாக உள்ளது . இவ்வாறான வழக்குகளில் துறையால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு பார்வை 2 ல் கண்டவாறு ஏற்றுக் கொள்ளப்பட்டும் , சார்ந்த ஆசிரியர்களால் தொடரப்பட்ட வழக்கு பார்வை 3 இல் கண்டவாறு தள்ளுபடி செய்தும் துறைக்கு சாதகமாக தீர்ப்பாணைகள் பெறப்பட்டன .

2 ) எனவே இக்கோரிக்கை சார்ந்து வேறு பிற ஆசிரியர்களால் வழக்குகள் ஏதேனும் தொடரப்படுமாயின் , பார்வை 2 மற்றும் 3ல் கண்டவாறு உள்ள தீர்ப்பாணைகளை மேற்கோள் காட்டி , வழக்கினை தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பார்வை 4 இல் காணும் இவ்வியக்கக செயல்முறைகளின் வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது .


3 ) இதனைத் தொடர்ந்து பார்வை 2 இல் காணும் மேல்முறையீட்டு தீர்ப்பாணையினை எதிர்த்து , மனுதாரர் திரு . எஸ் . சுந்தரவேல்ராஜ் என்பாரால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட சீராய்வு மனு பார்வை 5 இல் கண்டவாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .

4 ) மேலும் , இதேபோன்று , திருநெல்வேலி மாவட்டம் , மேலநீலிதநல்லூர் சரகம் , அத்தாலநல்லூரைச் சார்ந்த திரு . நல்லசிவன் என்பார் , நியமன நாள் முதல் ஒப்புதல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு டபிள்யு . ஏ . எண் 978 / 2016 , 07 . 02 . 2018 அன்று தள்ளுபடி செய்யப்பட்டு துறைக்கு சாதகமாக தீர்ப்பாணைப் பெறப்பட்டுள்ளது . இதனை எதிர்த்து திரு . நல்லசிவன் என்பார் புதுதில்லி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு விடுப்பு மனு பார்வை 6 இல் கண்டவாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .

5 ) எனவே , பார்வை 4 இல் காணும் சுற்றறிக்கையின் தொடர்ச்சியாக , இக்கோரிக்கை சார்ந்து வேறு பிற ஆசிரியர்களால் வழக்குகள் ஏதேனும் தொடரப்படுமாயின் , பார்வை 5 மற்றும் 6ல் கண்டவாறு உள்ள தீர்ப்பாணைகளை மேற்கோள் காட்டி , வழக்கினை தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இதன் மூலம் மீளவும் அறிவுறுத்தப்படுகிறது .

6 ) மேலும் , இச்செயல்முறைகள் ஆணையினை அனைத்து சார்நிலை அலுலவலர்களுக்கும் சார்பு செய்து அவர்களிடம் ஒப்புகைப் பெற்று கோப்பில் வைக்குமாறும் , இச்செயல்முறைகள் ஆணையினை பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலை உடன் அனுப்பிடுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


இணைப்பு:

பார்வை 5 மற்றும் 6ல் காண் தீர்ப்பாணை நகல் - Download Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent