இவ்வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது.
வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியலில் இதோ.
1. அடர் சிவப்பு - Cramoisy
2. அடர் நீலம் - Perse / Smalt
3. அடர் மஞ்சள் - Gamboge
4. அயிரை/ அசரை - Sandy colour
5. அரத்த(ம்) (நிறம்) - Heliotrope / Haematic
6. அருணம் - Bright red, colour of the dawn
7. அவுரி(நிறம்) - Indigo
8. அழல் நிறம் - Reddish colour of fire
9. ஆழ் சிவப்பு - Cinnabar
10. ஆழ் செந்நீலம் (ஊதா) - Claret
11. ஆழ் பழுப்பு - Brunneous
12. ஆழ் பைம்மஞ்சள் - Citrine
13. ஆழ்சிவப்பு - Cramoisy
14. ஆழ்நீலச் சிவப்பு - Aubergine
15. இடலை (ஆலிவ்வு) (நிறம்) - Olivaceous
16. இருள் சிவப்பு - Puccoon
17. இருள்சாம்பல் - Slate
18. இள மஞ்சள் - Flavescent / Primrose
19. ஈய(ம்) (நிறம்) - Plumbeous
20. ஈரல்நிறம் - Dark red colour, purple colour
21. உறைபால்(நிறம்) - Whey
22. எண்ணெய்க்கறுப்பு - Dark black colour
23. எலுமிச்சைம் - Citreous
24. ஒண்சிவப்பு - Cardinal
25. ஒளிர் செஞ்சிவப்பு - Phoeniceous
26. ஒளிர் செம்மை - Coccineous
27. ஒளிர் வெண்கலம் - Aeneous
28. ஒளிர் வெண்கலம் (நிறம்) - Aeneous
29. ஒளிர்சிவப்பு - Puniceous
30. ஒளிர்மஞ்சள் - Sulphureous / Vitellary
31. கசகசாச் சிவப்பு - Ponceau
32. கடல்நீல (நிறம்) - Ultramarine
33. கடற்பச்சை - Cerulean
34. கத்தரிநீலம் - Periwinkle (நித்திய கல்யாணி)
35. கபிலை / புகர்நிறம் - Tawny, brown or swarthy colour
36. கரு (நிறம்) - Sable
37. கருஞ்சிவப்பு - Porphyrous / Purpureal
38. கரும்பச்சை - Corbeau
39. கருமை - Nigricant / Nigrine
40. காயாம்பூ (நிறம்) - Purple colour
41. காளிமம் - Black colour
42. கிளிச்சிறை - Gold resembling the parrot's wing in colour
43. குங்குமச் சிவப்பு - Vermeil
44. குங்குமப்பூ(நிறம்) - Croceate / Saffron
45. குரால் - Dim, tawny colour
46. குருதிச்சிவப்பு - Erythraean / Sanguineous / Incarnadine
47. குருதிச்செம்மை - Vermilion
48. கோமேதக(நிறம்) -Topaz
49. சருகிலை (நிறம்) - Filemot
50. சாம்பல் - Cinerious
51. சாம்பல் பச்சை - Caesious / Sage
52. சாம்பல் மஞ்சள - Isabelline
53. சுடர் (நிறம்) - Flammeous
54. சுடுமண் (நிறம்) - Terracotta
55. சுதை வெண்மை - Cretaceous
56. செக்கர் - Reddish sky
57. செங் கருநீல (நிறம்) - Violet / Violaceous
58. செங்கருப்பு - Piceous
59. செங்கல்மங்கல் - Dim red colour
60. செங்கற்சிவப்பு - Lateritious / Testaceous
61. செந்தீவண்ணம் - Colour of glowing fire
62. செந்தூரச்சிவப்பு - Minium
63. செப்புநிறம் - Dark red colour
64. செம்பட்டை - Brown colour of hair
65. செம்பவளம் (மிகு சிவப்பு) - Deep red colour, Crimson colour
66. செம்பழுப்பு - Sinopia / Sorrel
67. செம்பு - Copper colour
68. செம்பூச்சி - Kermes
69. செம்பொன் - Titian
70. செம்மஞ்சள் - Jacinthe
71. செவ்வல் (செந்நிறம்) - Redness
72. சோணம் - Red colour, crimson colour
73. தசை (நிறம்) - Sarcoline
74. தவிட்டுநிறம் - Brown, dun colour
75. திமிரம் - Colour of Darkness
76. தும்பை நிறம் - Pure white colour
77. துமிரம் - Deep red colour
78. துரு (நிறம்) - Ferruginous
79. துருச் சிவப்பு - Rubiginous
80. துவர் (சிவப்பு) - Scarlet Red colour
81. துவரி (காவிநிறம்) - Salmon colour
82. தூயபழுப்பு - Sepia
83. தெள்ளுப்பூச்சி (நிறம்) - Puce
84. நட்டுச்சினைமண் - A kind of earth of the colour of crab's spawn
85. நல்சிவப்பு - Coquelicot
86. நறுமஞ்சள் - Lutescent
87. நன்மஞ்சள் - Luteolous
88. நன்னிறம் - White colour
89. நீல (நிறம்) - Azuline
90. நீல மணி - Sapphire
91. நீலச்சாம்பல் - Glaucous / Cesious / Gridelin / Lovat
92. நீலச்சிவப்பு - Amaranthine / Solferino
93. நீலப்பச்சை - Turquoise / Viridian
94. பச்சை - Chlorochrous
95. பசுமை - Virid
96. பழுக்காய் - Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut
97. பழுப்பு மஞ்சள் - Fulvous
98. பழுப்புச் சிவப்பு - Castaneous / Rufous / Russet / Umber
99. பழுப்புச்சாம்பல் - Greige / Taupe
100. பளீர்சிவப்பு - Stammel
101. பனிவெண்மை - Niveous
102. பாணிச்சாய் (கள்போன்ற முத்துநிறம்) - Colour of a class of pearls, resembling that of toddy
103. பால்வண்ணம்
White colour
104. புகர் நிறம் - Tawny / Tan
105. புகைக்கரி - Fuliginous
106. புள்ளிச் சாம்பல் - Liard grey
107. புற்பச்சை - Prasinous
108. புறவு (நிற) - Columbine
109. பூஞ்சல் (மங்கனிறம்) - Brownish colour
110. பூஞ்சாயம் (அழுத்தமான சிவப்பு) - Deep, ruddy colour
111. பூவல் - Red colour
112. பைந்நீல(நிறம்) - Teal
113. பைம்பொன் - Chrysochlorous
114. பொன் மஞ்சள் - Goldenrod
115. பொன்மஞ்சள் - Luteous
116. பொன்மை - Aurulent
117. மகரம் - Pink colour
118. மங்கல் பழுப்பு - Fuscous
119. மங்கல் பழுப்பு - Khaki
120. மங்கல்பச்சை - Eau-de-nil
121. மஞ்சள் - Xanthic / Icterine / Icteritious
122. மஞ்சள் பச்சை - Chartreuse / Zinnober
123. மஞ்சள் பழுப்பு - Lurid / Ochre
124. மஞ்சள்சிவப்பு - Wallflower
125. மணிச்சிவப்பு - Rubious
126. மணிநிறம் - Dark blue colour, as of sapphire
127. மயில்நீலம் - Pavonated
128. மரகதப்பச்சை - Smaragdine
129. மருப்பு (தந்தம்) - Eburnean
130. மல்லிகை மஞ்சள் - Jessamy
131. மாமை - Dark-brown colour
132. முக்கூட்டரத்தம் - Red colour produced by chewing betel, arecanut and lime
133. முத்துச்சாம்பல் - Griseous
134. வளர்பச்சை - Virescent
135. வாதுமை (நிறம்) - Ibis
136. வான் நீலம் - Cyaneous
137. விண் நீலம் - Celeste
138. விழி வெண்மை - Albugineous
139. வெங்காயப் பச்சை - Porraceous
140. வெண்சாம்பல் - Hoary
141. வெண்மங்கல் - Leucochroic
142. வெண்மஞ்சள் - Ochroleucous
143. வெளிர் நீலம் - Azure
144. வெளிர் பச்சை - Celado
145. வெளிர் மஞ்சள் - Nankeen
146. வெளிர் மஞ்சள் பச்சை - Tilleul
147. வெளிர்நீலம் - Watchet
148. வெளிர்பழுப்பு - Suede
149. வெளுப்பு - Albicant
150. வைக்கோல் (நிறம்) - Stramineous
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக