இந்த வலைப்பதிவில் தேடு

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

திங்கள், 3 பிப்ரவரி, 2020




5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


சென்னை அடையாறில் சமபந்தி விருந்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8-ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களுமே தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.



மேலும், 'மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் வளர்ச்சிக்காகவே பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது, எனவே, வரும் பொதுத்தேர்வில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள்' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent