இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

வியாழன், 27 பிப்ரவரி, 2020



தமிழகத்தில் இந்தாண்டு பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடைகிறது. 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது. இந்த 3 வகை தேர்வுகளுக்கான ஏற்பாடுகளில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளிலும், சம்பந்தப்பட்ட வகுப்பறைகளிலும், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலும் தேர்வுக்கால அட்டவணைகள் ஒட்டப்பட வேண்டும். மையங்களுக்கும் முதன்மை விடைத்தாள் கூடுதல் விடைத்தாள், வரை கட்டத்தாள் வழங்கப்பட்டு உள்ளது. முகப்புத்தாள் கட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 

முதன்மை விடைத்தாள்களுடன் முகப்புத்தாள்கள் தைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யப்பட வேண்டும். தேர்வு மையங்களில் காவலர் பாதுகாப்பிற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் கடிதம் அளிக்கப்பட்டு, காவலர் வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


செய்முறைத் தேர்வு நடத்தி முடித்து மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிளஸ்1, பிளஸ்2 மாணவர்கள் அனைவரின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 10ம் வகுப்பு மொழிப்பாடம், ஆங்கில பாடங்களில் ஒரே தாளாக தேர்வுகள் நடத்தப்படும் என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பொதுத் தேர்வுகளுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். 

10ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேர்வு நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது என்பதையும் அறிவுறுத்த வேண்டும். இவைகளை தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent