இந்த வலைப்பதிவில் தேடு

பொது தேர்வு தேதி அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிட மாணவர்கள் வேண்டுகோள்

சனி, 22 பிப்ரவரி, 2020



பொதுத் தேர்வுகளுக்கான தேதி குறித்த முழுமையான அட்டவணையை, இணையதளத்தில் வெளியிடுமாறு, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

>
 தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது; 24ல் முடிகிறது. ஏப்ரல், 24ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன  பிளஸ் 1 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்குகிறது; 26ல் முடிகிறது. மே, 14ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன


 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச், 27ல் துவங்குகிறது; ஏப்ரல், 13ல் முடிகிறது. மே, 4ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. பொதுத் தேர்வு தொடர்பாக, பள்ளி கல்வித் துறையில் இருந்து, 2019 ஜூலையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 17ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.பின், தேதி மாற்றப்பட்டு, 2019 செப்., 16ல், புதிய அறிவிப்பு வெளியானது. 

>
அதன்படி, மார்ச், 27ல் தான், 10ம் வகுப்பு தேர்வுகள் துவங்குகின்றன. ஜூலையில் வெளியிடப்பட்ட பொதுத் தேர்வு தேதி அட்டவணை, தேர்வு துறையின் இணையதளத்தில் இடம் பெற்றிருந்தது. 10ம் வகுப்புக்கான தேர்வு தேதி மாற்றப்பட்ட பின், அந்த அட்டவணை, தேர்வு துறை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.


இந்நிலையில், பொதுத் தேர்வு குறித்த பழைய அறிவிப்புகள், 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் பரவுவதால், தேர்வு தேதிகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும், பழைய பாடத்திட்டத்தில் பொதுத் தேர்வு நடக்கும் தேதி என்ற பட்டியல், தேர்வு துறை இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே, புதிய பாடத்திட்டத்திற்கான தேர்வு அட்டவணை எங்கே என, மாணவர்கள் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

>

மேலும், பாடவாரியாக பொதுத் தேர்வு தேதியை, அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள முடியாமல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ தேதி அட்டவணையை, பள்ளி கல்வித் துறை மற்றும் அரசு தேர்வு துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent