பொதுத்தேர்வு மையங்க ளில் தேர்வு பணியில் ஈடுபவர்கள் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள் ளது.
தமிழகத்தில் ஈம்வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக ளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டு தோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன் படி இந்தாண்டு பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி முடிகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதிவெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட் டுள்ளது.
அதேபோல் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி 2௦ம் தேதி முடிவடைகி றது. தேர்வு முடிவு கள் மே 14ம் தேதி வெளியாகும். இந்த 2 வகை தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி இரண் டரை மணிநேரம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அந்த சுற்றறிக் கையில், 'பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்றும் முதன்மை கண்காணிப்பா ளர், துறை அலுவலர்கள் அறை கண்காணிப்பா ளர் மற்றும் அலுவலக பணியாளரக்ள் தேர்வு நேரங்களில் எக்கார ணத்தை கொண்டும் செல்போன் பயன்ப டுத்தக்கூடாது. மீறி பயன் படுத்தினால் அவர்களது கடும் நடவடிக்கை எடுக் கப்படும். மேலும், பள்ளிக ளில் லேண்ட் லைன் போனை பயன் பாட் டில் வைக்க வேண்டும். லேண்ட்லைன் இல்லாத பள்ளிகளில் உடனடியான தொலைபேசி இணைப்பை சரி செய்யவேண்டும் அல் லது புதிய இணைப்பை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்'இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக