பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
அறிவியல் அறிஞர், 1000 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரர் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் பிறந்தநாள்
திருக்குறள்
அதிகாரம்:ஊழ்
திருக்குறள்:377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
விளக்கம்:
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.
பழமொழி
Don't beat about the bush
சுற்றி வளைத்து மூக்கைத் தொடாதே.
இரண்டொழுக்க பண்புகள்
1. என்னிடம் இருப்பவைகள் கடவுளின் கொடை எனவே பெருமை பட மாட்டேன்.
2. இல்லாதவற்றை கடவுள் ஒரு நாள் தருவார் எனவே இருப்பவரை பார்த்து பொறாமை கொள்ள மாட்டேன்.
பொன்மொழி
ஒரு புன்னகையில் இருந்தே அமைதி பிறக்கிறது.
- அன்னை தெரசா
பொது அறிவு
1.கண்டுப்பிடிப்புகளின் பேரரசன் என்றழைக்கப்படுபவர் யார்?
தாமஸ் ஆல்வா எடிசன்.
2.தாமஸ் ஆல்வா எடிசன் எத்தனை கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தி உள்ளார்?
1300 கண்டுப்பிடிப்புகள்
3. தாமஸ் ஆல்வா எடிசன் ஆரம்பித்த பத்திரிக்கையின் பெயர் என்ன?
வீக்லி ஹெரால்டு.
English words & meanings
Marine Biology– study of the ocean's ecosystem. கடல் சார் சுற்று சூழல் குறித்த படிப்பு.
Magnanimous - generous and forgiving even the enemies. எதிரியையும் மன்னிக்கும் பண்பும் பெருந்தன்மையுள்ள குணம்
ஆரோக்ய வாழ்வு
இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் .இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும்.
Some important abbreviations for students
DC - desktop computer.
G - game
நீதிக்கதை
திருக்குறள் நீதிக்கதைகள்
தற்பெருமை பேசிய நரி
குறள் :
அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
விளக்கம் :
மற்றவர்களுடன் ஒத்து நடக்காமல், தன் உண்மையான வலிமையின் அளவையும் அறியாமல் தன்னையே வியந்து பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பவன் விரைவிலே அழிந்து போவான்.
கதை :
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு என்ன தெரியும்? என்று கேட்டது. எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும் என்றது பூனை.
அப்போது பெரிதாக ஒரு சப்தம் கேட்டது. ஓநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது.
அதைக் கண்டு பூனையுன் நரியும் பயந்தன. பூனை உடனே மரத்தில் பாய்ந்து உச்சியில் ஏறிக்கொண்டது. நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன்படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.
நீதி :
தன்னுடைய வலிமை மட்டுமே பெரியது என நினைத்து பேசக் கூடாது.
இன்றைய செய்திகள்
11.02.20
★2020 - 2021 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பரிந்துரை செய்துள்ளது.
★சென்னையில் போக்குவரத்து விதிமீறல் அதிகரித்துவரும் நிலையில் சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைப் படமெடுக்கும் நவீன ஏஎன்பிஆர் கேமராக்கள் சென்னையில் அதிகமாகப் பொருத்தப்பட்டு வருகின்றன.
★குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் நடத்தப்படும் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அதேசமயம் மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளது.
★பிரிட்டிஷ் ஏர்வேஸின் பயணிகள் விமானம் ஒன்று முழு அட்லாண்டிக் பெருங்கடலையும் ஐந்தே மணி நேரத்தில் பறந்து சென்று சாதனை படைத்துள்ளது.
★ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோா்) இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் இந்தியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதன்முறையாக பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தது வங்கதேசம்.
★எப்ஐஹெச் புரோ ஹாக்கி லீக்கில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
Today's Headlines
🌸All India Technical Education Council (AICTE) suggested to increase the fees structure of all engineering colleges from 2020 - 2021 academic year.
🌸As there is increase in the rate of traffic violations the modern ANPR cameras which take the photos of vehicles' number plates are being fixed more in numbers.
🌸The Supreme Court which is hearing the case of protest against the CAA takes place in Shahin Bagh at Delhi gave it's opinion that people can protest without disturbing the normal life of the city.
🌸A Passenger plane of British Airways made a record by flying across the entire Atlantic in five hours.
🌸 In the Junior World Cup Cricket Tournament( Under 19) Bangladesh won India by 3 wickets and bags the title for the first time and make the record.
🌸 Belgium beat India 3-2 in FIH Pro Hockey League.
Prepared by
Covai women ICT_போதிமரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக