இந்த வலைப்பதிவில் தேடு

போராட்ட ஆசிரியர்கள் மீதான 17 ஆ ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து - CEO செயல்முறைகள்!

ஞாயிறு, 1 மார்ச், 2020



இடைநிலை ஆசிரியர் ஊதியமீட்பு அரசாணை எரிப்பு 17 ஆ ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து...


மதிப்புமிகு. ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்..


மேற்காண் பொருள் தொடர்பில் பார்வை 1 - ல் காணும் செயல்முறைகளின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 26 . 11 . 2018 அன்று நடத்தப்பட்ட அரசாணை எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட 121 ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகளில் விதி 17 ( b ) ன் கீழ் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . 


மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீதான வழக்கு மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக பார்வை 4 - ன் படியும் , மேற்படி வழக்கு சார்பான முதல் தகவல் அறிக்கை இரத்து செய்யப்பட்டதாக பார்வை 5 - ன் படியும் தகவல் பெறப்பட்டுள்ளது . இத்தகவல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள ஆணையிடப்படுகிறது . 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent