இந்த வலைப்பதிவில் தேடு

பிளஸ் 2 கணக்கு தேர்வு - மாணவர்கள் அதிர்ச்சி

செவ்வாய், 10 மார்ச், 2020



பிளஸ் 2 கணக்குத் தேர்வில் இடம்பெற்ற கேள்வித்தாள் கடினமாக இருந்ததால், இந்த தேர்வில் சென்டம் எடுப்பது கடினம் என்று மாணவர்கள் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கியது.

மொழிப்பாடத் தேர்வுகள் 5ம் தேதியுடன் முடிந்த நிலையில் நேற்று கணக்கு பாடத் தேர்வு நடந்தது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கணக்குத் தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அதில் 90 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வும், அகமதிப்பீட்டில் 10 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதன்படி 90 மதிப்பெண்களுக்கான ேதர்வு நேற்று நடந்தது. தேர்வில் மொத்தம் 90 மதிப்பெண்களுக்கான கேள்விகள் இடம்பெற்று இருந்தன. அவற்றில் 1, 2, 3, 5 மதிப்பெண்களுக்கான கேள்விகள் என மொத்தம் 47 கேள்விகள் இடம் பெற்றன.

மேலோட்டமாக பார்த்தால் நேற்றைய கணக்குப் பாடத்துக்கான கேள்வித்தாள் மிதமான அளவில் இருந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால், மிகவும் கடினமான கேள்வித்தாள் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஒரு மதிப்ெபண்ணுக்கான கேள்விகளில் 16 கேள்விகள் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. 4 கேள்விகள் புத்தகத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. 


இதற்கு விடையளிப்பதில் சிரமம் இருந்தது. 2 மதிப்பெண்களுக்கான கேள்விகள் அனைத்தும் மிகவும் கடினமாக இருந்தது. 3 மதிப்பெண்ணுக்கான கேள்விகளில் 35வது கேள்வி மிகவும் கடினமாக இருந்தது. 40வது கேள்வியை குழப்பமாக கேட்டுள்ளனர். மாணவர்கள் அந்த கேள்விக்கு யோசித்துதான் எழுத வேண்டும். இந்த கேள்வி கட்டாய கேள்வியாக இடம் பெற்றுவிட்டதால் மாணவர்கள் விடை எழுத மிகவும் சிரமப்பட்டனர். 

5 மதிப்பெண்களுக்கான கேள்விகளில் 42வது கேள்வியில் பிரிவு‘ஏ’ கேள்வி மிகவும் கடினமாக இருந்தது. 43வது கேள்வி எளிதாக இருந்தாலும் 44வது கேள்வியில் பிரிவு ‘பி’ கேள்வி மிகவும் கடினமாக இருந்தது. 47ல் பிரிவு‘ஏ’ கடினமாக இருந்தது. பிரிவு ‘பி’ கேள்வி எளிதாக இருந்தது.

அதேபோல 46வது கேள்வியும் கடினம். 47வது கேள்வியை பொறுத்தவரையில் பிரிவு ஏ கேள்வி என்பது புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டு இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வில் சென்டம் எடுப்பது கடினம். சராசரியாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு இந்த கணக்குத் தேர்வு மிகவும் கடினமாக இருந்தது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு முறை வைத்து விட்டதால், பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேரவே ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பில் வேதியியல் பாடம் சேர்க்கப்படுமா என்ற சந்தேகம் உள்ளது. அதனால் கணக்கு மற்றும் கணினி அறிவியல் பாடங்கள்தான் முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. அப்படி இருக்க நேற்றைய கணக்குப் பாடத்தின் கேள்வித்தாள் கடினமாக இருந்ததால், இந்த ஆண்டுக்கான பொறியியல் கட்ஆப் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக  குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent