இந்த வலைப்பதிவில் தேடு

உங்களது மொபைல் எண்ணை ATM மெஷின் மூலம் எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?

திங்கள், 30 மார்ச், 2020

Stay Safe Stay Connected!!! Now recharge  your  Mobile anytime when you visit your nearest bank ATM


கோரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மத்திய அரசால் வரும் ஏப்ரல் 14வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மொபைல் ரீசார்ஜ் செய்யும் கடைகள் எதுவும் இல்லை. ஆன்லைன் மூலமாக ரீசார்ஜ் செய்ய தெரியாதவர்கள் உங்களது மொபைல் எண்ணிற்கு ATM மெஷின் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரியுமா?

வாங்க.. ஈஸியா எப்படி உங்களது மொபைல் நம்பரை ATM மெஷினில் ரீசார்ஜ் செய்வது எப்படினு இந்த பதிவில் பார்க்கலாம்.முதலில் உங்கள் அருகாமையில் உள்ள ATM மெஷின் இருப்பிடத்திற்கு செல்லுங்கள்.

 உங்கள் ATM கார்டை மெஷின் செருகுங்கள். இப்போது "ரீசார்ஜ் (Recharge)" என்ற விருப்பத்தை தேர்வு செய்யுங்கள். நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய எண்ணை உள்ளிடுங்கள்.

இப்போது மெஷின் உங்கள் 4 இலக்க PIN நம்பரை உள்ளிட சொல்லி கேட்கும். அப்போது PIN நம்பரை உள்ளிடுங்கள்.

அடுத்து, நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய பண மதிப்பை உள்ளிடுங்கள். MyJio ஆப் மூலம் சரியான ரீசார்ஜ் எண்ணை தான் உள்ளிடுகிறோமா என்று ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

சரிபார்த்துவிட்டு உறுதி செய்ய ENTER பொத்தானை அழுத்துங்கள். இப்போது ATM மெஷின் திரையில், ரீசார்ஜ் மெசேஜ் தோன்றும் மற்றும் நீங்கள் குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கில் இருந்து எடுக்கப்படும் என்று காண்பிக்கும்.

ரீசார்ஜ் வெற்றிகரமாக ஆகியிருந்தால் நீங்கள் ரீசார்ஜ் செய்த எண்ணிற்கு மெசேஜ் வரும்.அவ்வளவுதான், ATM மெஷின் மூலம் உங்கள் ரீசார்ஜ் வெற்றிகரமாக முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent