இந்த வலைப்பதிவில் தேடு

தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - மாணவர்களை டீ வாங்கிவரச்‌ செய்ததால்‌ நடவடிக்கை

ஞாயிறு, 1 மார்ச், 2020


கடலூர்‌ மாவட்டம்பண்ருட்டி அருகேஉள்ள பூங்குண த்தி ௧ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு பூங்கு ணம்‌ மற்றும்‌ அதை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த ஏழை மாணவ-மாணவிகள்‌ படித்து வருகிறார்கள்‌. 


இந்த பள்ளியின்‌ தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த சீனுவாசன்‌ வகுப்பு நேரத்தில்‌ மாணவர்களை கடைக்கு அனுப்பி டீ வாங்கி வரச்‌ சொல்வாராம்‌. சம்பவத்தன்றும்‌ அவர்‌ சில மாணவர்களை டீ வாங்கி வரச்‌ சொன்னார்‌. மாணவர்கள்‌ கடைக்கு சென்று டீ வாங்கிவருவதையாரோ சிலர்‌ செல்போனில்‌ படம்‌ பிடித்து வாட்ஸ்‌-அப்பில்‌ வெளி யிட்டனர்‌. 


இந்தகாட்சிவாட்ஸ்‌-அப்பில்‌ வைரலானதையடுத்து இந்த விவகாரம்‌ மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரோஸ்‌ நிர்மலாவின்‌ பார்வைக்கு வந்தது. இவரது அறிவுரையின்‌ பேரில்‌ உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, ்‌. சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அதிகாரிகளுக்கு கடலூர்‌ கல்வி மாவட்ட அதிகாரி சுந்தரமூர்த்தி உத்தரவிட்டார்‌. அதன்பேரில்‌ வட்டார கல்வி அதிகாரிகள்‌ பூங்குணம்‌ ஊளராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று மாணவர்‌ கள்‌, அசிரியார்களிடம்‌ விசாரணை நடத்தினர்‌. 


இதில்‌ தலைமை ஆசிரியர்‌ சீனுவாசன்‌ மாணவர்களை அவ்வப்‌ போது கடைக்கு அனுப்பி வைத்து டீ வாங்கி வர செய்தது உறுதியான இது தொடாபான வசாரணை அற்ககையை மாவட்ட கல்வி அதிகாரி சுந்தரமூர்த்தியிடம்‌ வட்டார கல்வி அதிகா ரிகள்‌ வழங்கினர்‌. அதன்‌ பேரில்‌ தலைமை ஆசிரியர்‌ சீனு வாசனை பணியிடை நீக்கம்‌ செய்து மாவட்ட கல்வி அது காரி சுந்தரமூர்த்தி உத்தரவிட்டார்‌. தலைமை ஆசிரியர்‌ . சீனுவாசன்‌ ஏற்கனவே ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்‌ டத்தில்‌ கலந்து கொண்டதையடுத்து அவரிடம்‌ விளக்கம்‌ கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீசு அனுப்பிஇருந்ததும்‌ குறிப்பிடத்தக்கது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent