அந்த சக்திக்கு நீங்கள் ஆண்டவர் என்று பெயர் வைத்தாலும் சரி.. இல்லை கடவுள் என்று பெயர் வைத்தாலும் சரி.. இல்லை இயற்கை என்றாலும் சரி.. நம் சக்தியை மீறி ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டுவிக்கிறது என்பது உண்மை...
கொஞ்சம் திரும்பி பாருங்கள்.. 5 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று எவ்வளவோ போராட்டம்.. அது இது மாணவர்கள் கஷ்டப்படுவார்கள். என்று ... ஆனால் இன்று நிலைமை என்ன அந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடக்குமா? என்று சந்தேகம்.. மார்ச் 31 வரை விடுமுறை... எவ்வளவு ஜாலியாக இருப்பார்கள்.. இதான் இயற்கை மீறிய சக்தி...
ஆனால் ஆசிரியகள் பள்ளிக்கு வரவேண்டும்.. இது குறித்த பல பதிவுகள் முகநூலில் வலம் வருகின்றன.. நமக்கு ஏன் விடுமுறை….. இப்போ பள்ளிக்கு சென்று பாருங்கள்.. வெறிச்சோடி கிடக்கும் விளையாட்டு மைதானங்களைப் பாருங்கள். மாணவர்களின் அருமை புரியும்.. மாணவர் இல்லாத வகுப்பறையைப் பாருங்கள் இரைதேடிச் சென்ற சிங்கத்தின் குகைபோல அமைதியாக காட்சியளிக்கும்.
அவர்கள் இல்லாமல் நாம் இல்லை...
மாணவர்களால் நாம்... மாணவர்களுக்காகவே நாம்.... இதை நான் அடிக்கடி சொல்வேன்..
இப்போது அனைவரும் உணர்வோம்.. பள்ளிகளில் மாணவர்கள் இல்லாமல் என்ன செய்யபோகிறோம்.. சி.சி.இ. பதிவேடுகள் நிரப்ப போகிறோமோ... அல்லது பல பதிவேடுகள் இருக்கின்றனவே அதை செய்ய போகிறோமோ.... ஏதேனும் ஒன்றைச் செய்யவேண்டுமே.. சும்மா நம்மால் இருக்க முடியாதே... சும்மா இருந்தால் நமக்கு பித்துபிடித்தது போல் அல்லவா இருக்கும்.
என்ன செய்யலாம்.. வாருங்கள்.. கொஞ்சம் எனக்கு தெரிந்த ஐடியாக்கள் தருகிறேன்.
1. பதிவேடுகள் பாக்கி இருந்தால் முடித்து விடுங்கள்.
2. பள்ளியைத் தூய்மைப்படுத்த அருகில் உள்ள ஊராட்சி மன்ற பணியாளர்களை வரவழைத்து தூய்மைப்படுத்திடுங்கள்.. பெரிதாக செலவு இல்லை.. அவர்களுக்கு காபி செலவு செய்தால் சந்தோசமாக செய்வார்கள்.
3. முடிந்தால் ஊரில் புரவலர்கள் இளைஞர்களை, முன்னாள் மாணவர்களைக் கண்டு பள்ளிக்கு புதிய வண்ணம் தீட்டிடுங்கள். இல்லையெனில் நாம் ஒன்று சேர்ந்து பணம் போட்டு வண்ணம் தீட்டிடுவோம்.. நம் பள்ளி தானே.. நமக்கும் நம் குடும்பத்திற்கும் சோறு போடும் பள்ளிதானே... இந்த முறை நாம் நம் வீட்டைச் சுத்தப்படுத்துவதுபோல் பள்ளியை அனைவரும் சேர்ந்து சுத்தப்படுத்துவோமே....
4. கற்பித்தல் முறைகளைக் கண்டறிய புது புது புத்தகங்கள்.. குழந்தை உளவியல் குறித்து வாசியுங்கள்..
5. மாணவர்களைத் தேடி அவர்களின் தெருவுக்குள் பயணியுங்கள்.. குழந்தைகளை அவர்களின் வீட்டில் நீங்கள் கண்டால் அவர்களின் முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பும் மகிழ்ச்சியும் தாண்டவமாடும்.. அதிலும் அவர்கள் வீட்டில் நீங்கள் அமர்ந்து தண்ணீரோ காபியோ குடித்தால் போதும் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை... முயற்சித்து பாருங்கள்.
6. மாணவர்களின் பின்புலங்கள். பெற்றோர்கள் உறவினர்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
7. பள்ளியின் ஹேபிடேசனில் அடுத்த வருடங்களுக்காக மாணவர் சேர்க்கைக்காக துண்டு விளம்பரத்தில் உங்கள் பள்ளியின் சாதனைகளை அச்சடித்து விநியோகியுங்கள்.
8. மாலை நேரங்களில் உங்களின் நீண்ட கால பிரச்சினைகளைத் தீர்க்க கல்வி அலுவலர்களை நாடுங்கள் ஒன்றைக் கவனத்தில் வையுங்கள். தற்போது கலவி அலுவலர்கள் பொதுத்தேர்வு பிசியாக இருப்பார்கள் அதைக் கவனத்தில் வைத்து அவர்களின் ஓய்வு நேரத்தில் சந்தித்து பிரச்சினைகளை களையுங்கள்...
9. பள்ளிக்கு தேவையான புரவலர்களைத் தேடுங்கள்.. முன்னாள் மாணவர்களைத் தேடி வாட்சப் குழு ஒன்றை உருவாக்கி பள்ளியின் தேவைகளைத் தெரிவியுங்கள். யாராவது ஒருவர் உதவ துடித்துக் கொண்டிருப்பார்.. அவருக்கு இது எளிதாகும்..
10. பள்ளியில் குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். மின்சார வயர் பாதுகாப்பாக இருக்கிறதா? குடிநீர பாதுகாப்பாக இருக்கிறதா? குப்பைகள் அகற்ற நல்ல வழிகள் இப்படியான குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்.
11. நான்குபேர் ஒன்று சேர்ந்து பள்ளியின் மெல்ல மலரும குழந்தைகள் குறித்து உரையாடுங்கள்.. அவர்களுக்கு உள்ள தனித்திறன்களைக கண்டறிந்து அதில் அவரைச் சிறப்பாக கொண்டு வாருங்கள்.
12. ஏதேனும் ஒரு விளையாட்டில் உங்கள் பள்ளி சிறப்பாக இருக்க வேண்டும். அதை கவனத்தில் வைத்து அவ்விளையாட்டில மாணவர்களைச சிறந்த மாணவர்களாக்க பழைய மாணவர்கள் அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடுங்கள்.
13. இன்னும் “நிறைய…““ உங்களின் எண்ண ஓட்டத்திற்கு விட்டுவிடுகிறேன்… பட்டைய கிளப்புங்கள்.. அடுத்த வருடத்திற்கு இப்போதே தயாராகுங்கள்.“… அய்யோ நம்மை வரவழைத்து விட்டார்களே என்று வருத்தப்படாதீர்கள்.
ஆசிரியப்பணி அறப்பணி..அதற்கு நம்மை அர்ப்பணித்துவிட்டோம்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக