இந்த வலைப்பதிவில் தேடு

குழந்தைகள் எவ்வளவு எடை இருக்க வேண்டும்?

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020



Dr. V. Hariharan, MBBS, MD.,
Diet consultant

பெரியவர்கள் எல்லோருக்கும் நார்மல் எடை எவ்வளவு என நமக்குத் தெரியும். அவர்கள் உயரத்தில் இருந்து நூறை கழித்து விட்டால் அது தான் அவர்கள் நார்மல் எடை (எ. கா., 165 செமீ உயரம் என்றால் 65 கிலோ என்பது கரெக்ட்டான எடை), அல்லது அவர்கள் bmi 18-25 இருந்தால் கரெக்ட் தான். 25-30=ஓவர் வெயிட்; >30 குண்டானவர்கள் ஆகும். ஆனால் குழந்தைகளுக்கு இது கரெக்ட் கிடையாது. என் மகன் 145 செமீ உயரம் இருக்கிறான். அதனால் 45 கிலோ எடை கரெக்ட் என்பது மிகத்தவறாகும்.

குழந்தைகள் எவ்வளவு எடை இருக்க வேண்டும்? இந்திய குழந்தைகள் டாக்டர்கள் சங்கத்தின் வரைமுறை கீழே உள்ள படத்தில்.

என் மகன்/மகள் நார்மல் எடை உள்ளாரா?


முதலில் அவர் உயரம் என்னவென்று பார்க்கவும். ஒவ்வொரு வருடமும் செக் செய்யவும்.

மேலே சொன்ன உயரத்தில் அவர் இருந்தால் ஓகே.

வெயிட் பார்க்கவும். அவர் வயதிற்கு அந்த எடையில் இருக்கிறார் என்றால் ஓகே.

Situation 1: எடைக்கேற்ற உயரம் இல்லை: அவர் உயரம் கம்மி, அல்லது அதிகம். பரவாயில்லை. அப்போது வயதை விட்டு விடுங்கள். அவர் உயரத்திற்கு மேலே சொன்ன எடை இருக்கிறார் என்றால் ஓகே தான்.

Situation 2: அவர் உயரத்திற்கேற்ற எடையை விட அதிகம் இருக்கிறார். இப்போது BMI கால்குலேட் செய்யவும் [BMI=Weight in kg / (height in metres)2].
உங்கள் செல்போனில் கால்குலேட்டர் ஆப்ஷன் ஓபன் செய்யவும். அவன் எடை அழுத்தவும். பின்னர் / பட்டனை அமுக்கி அவன் உயரத்தை மீட்டரில் அழுத்தவும் (எ. கா., அவன் எடை 45 கிலோ. உயரம் 155 செமீ என்றால் 1.55 மீட்டர். அப்படியென்றால் 45/1.55 என அழுத்தவும்). 

பின்னர் மீண்டும் / பிரஸ் செய்து மீண்டும் உயரத்தை அழுத்தவும் (அதாவது bmi =45/1.55/1.55). இதில் வரும் பதில் தான் BMI (Body Mass Index). அவர் உயரத்திற்கேற்ற எடை இருக்கிறாரா என பார்க்கும் ஒரு கால்குலேஷன். இப்போது மேலே உள்ள டேபிளில் அவர் உயரத்திற்கேற்ப BMI இருக்கிறாரா எனப் பார்க்கவும். BMI நார்மலில் இருக்கிறார் என்றாலும் ஓகே தான்.

Situation 3: எடை அதிகம், அதனால் BMI அதிகம்.



BMI வைத்து, அவர் ஓவர் வெயிட் categoryயா அல்லது obese எனும் குண்டானவர் categoryயா எனப் பார்க்கவும்.

இதில் WHO எனும் உலக சுகாதார நிறுவன சார்ட் இருக்கிறது. அது நம் நாட்டு குழந்தைகளுக்கு அவ்வளவாக பொருந்தாது. மேலே சொன்னதே நமக்கு சரியானதாகும். மேலே சொன்ன உயரம் மற்றும் எடை, பல ஆண்டுகளாக இந்திய குழந்தைகளின் வயது, உயரம் மற்றும் எடையை வைத்து போடப்பட்டது. இன்றைய தேதியில் இது மிகவும் சரியானதே.

ஓவர்வெயிட்- இந்த குழந்தைகள் 23 வயதில் இருக்க வேண்டிய எடை, இப்போதே இருக்கிறார்கள் என அர்த்தம்

Obese- இந்த குழந்தைகள் 28 வயதில் இருக்க வேண்டிய எடை, இப்போதே இருக்கிறார்கள் என அர்த்தம்

இதற்கு தீர்வு என்ன? ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பொதுவாக கீழே தந்துள்ளேன். கருத்துகள் மாறுபடலாம், என் கருத்து கீழே:
1. நார்மல் உயரம்- ஒன்றும் செய்ய வேண்டாம்
2. அதிக உயரம்- ஒன்றும் செய்ய வேண்டாம்
3. மிக அதிக உயரம்- டாக்டரைப் பார்க்கவும்
4. உயரம் கம்மி- ஒன்றும் செய்ய வேண்டாம்
5. மிகவும் குள்ளம்- டாக்டரைப் பார்க்கவும்
6. எடை நார்மல்-ஒன்றும் செய்ய வேண்டாம்.
7. எடை குறைவு- ஒன்றும் செய்ய வேண்டாம்.
8. எடை மிக குறைவு- ஜெனிடிக்காக இருக்கலாம். எதற்கும் டாக்டரைப் பார்க்கவும்.

முக்கியமான விஷயத்தை பார்ப்போம்.


9. எடை அதிகம்: BMI பார்க்கவும்-

a. BMI அதிகம்- நார்மலுக்கு மேலே ஓவர் வெயிட்டிற்கு கீழே உள்ளார்கள்- வீட்டில் சர்க்கரை வாங்குவதை நிறுத்தவும். கரும்பு சர்க்கரை, நாட்டு சர்க்கரை, தேன், கருப்பட்டி, வெல்லம், ஒயிட் சுகர் எல்லாவற்றையும் நிறுத்தவும். ஜூஸ் வேண்டாம். அடுத்த வருடம் இதே போல் உயரம் மற்றும் எடை பார்க்கவும்.

b. BMI அதிகம்- ஓவர் வெயிட் பட்டியலில் மற்றும் obese (குண்டானவர்கள்) பட்டியலில் வருகிறார்கள் - வீட்டில் சர்க்கரை வாங்குவதை நிறுத்தவும். கரும்பு சர்க்கரை, நாட்டு சர்க்கரை, தேன், கருப்பட்டி, வெல்லம், ஒயிட் சுகர் எல்லாவற்றையும் நிறுத்தவும். ஜூஸ் வேண்டாம், எந்த பழமும் வேண்டாம். 

வருடம் ஒரு முறை HBA1c எனும் மூன்று மாத சுகர் ஆவரேஜ் டெஸ்ட்டை பார்க்கவும். ஏனெனில் இவர்களுக்கு சுகர் வரும் வாய்ப்பு உண்டு. மேலே சொன்னவற்றை பாலோ செய்தும் எடை குறையவில்லை என்றால், அவர்கள் மன அழுத்தம் அதிகம் இருந்தால், அதையும் குறைக்கவும். அதிலும் எடை குறையவில்லை என்றால், எதாவது டயட் மற்றும் உடற்பயிற்சி ஆரம்பிக்க வேண்டும்.


c. BMI மிக மிக அதிகம்- obese (குண்டானவர்கள்) பட்டியலில் இருப்பதை விட BMI அதிகம். வருடம் ஒரு முறை HBA1c எனும் மூன்று மாத சுகர் ஆவரேஜ் டெஸ்ட்டை பார்க்கவும். ஏனெனில் இவர்களுக்கு சுகர் வரும் வாய்ப்பு உண்டு. இப்போதே ஏதேனும் டயட் மற்றும் உடற்பயிற்சி ஆரம்பிக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent