இந்த வலைப்பதிவில் தேடு

ஊரடங்கு விதியை பின்பற்றுவோருக்கு அரசு சான்றிதழ்

செவ்வாய், 31 மார்ச், 2020




ஊரடங்கு விதியை பின்பற்றி வீட்டிலேயே இருப்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்குவிப்பு சான்றிதழ் வழங்குகிறது. கொரோனா பரவலை தடுக்க, ஏப்.14 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.



இருந்தும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக கூறி, பலரும் வெளியே சுற்றி வருகின்றனர்.அதே சமயம், 21 நாள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வீட்டிலேயே இருப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கி வருகிறது.மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மூலம் 'ஸ்டே அட் ேஹாம், ஸ்டே லைவ் பிளட்ஜ்' என்று சான்றிதழ் வழங்கப்படுகிறது.



ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து, வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து தன்னையும், சுற்றுப்புற மக்களையும் பாதுகாக்க விரும்பும் எவரும் https:// pledge.mygov.in ல் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். அதில், பெயர், பாலினம், இமெயில், வீட்டு முகவரி, மாவட்டம், மாநிலம் மற்றும் அலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.



தொடர்ந்து, 21 நாட்கள் ஊரடங்கு விதியை பின்பற்றுவேன். வீட்டிலேயே தங்கியிருப்பேன் என உறுதி மொழி ஒப்புதல் அளித்ததும் சான்றிதழ் திரை முன்பாக தோன்றும். அதனை டவுன்லோடு செய்து பிரின்ட் எடுக்கலாம். பிறகு, நாம் வீட்டிலேயே தங்கியிருப்பது அலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி செய்யப்படும். இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 391 பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent