இந்த வலைப்பதிவில் தேடு

கொரோனா பாதிப்பு; லீவ் வேண்டும்!' -தலைமை ஆசிரியைக்கு அதிர்ச்சிகொடுத்த சென்னை மாணவர்

புதன், 11 மார்ச், 2020



சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், தலைமை ஆசிரியருக்கு லீவ் லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ``நான் தங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். தற்போது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவிவருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி காய்ச்சல், அறிகுறி தெரிகிறது.எனவே, மற்ற மாணவர்கள் நலன்கருதி நான் நீண்ட விடுப்பு (மெடிக்கல் லீவ்) எடுத்துக்கொள்கிறேன்.


மேலும் சளி, காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அரசாங்கமும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆகையால், நான் மற்ற மாணவர்களின் நலன்கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாள்களை வருகை நாளாகப் பதிவுசெய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம், சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை ஃப்ளோராவிடம் பேசினோம்.

``சம்பந்தப்பட்ட மாணவன், இந்தப்பள்ளியில்தான் படிக்கிறான். அவன் நேற்றுவரை பள்ளிக்கு வந்தான். இந்த லீவ் லெட்டரை பள்ளிக்கு அவன் வந்து கொடுக்கவில்லை. ஆனால், சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளான். நான்கூட சமூக வலைதளத்தில்தான் அந்த லெட்டரைப் பார்த்தேன். உடனே சம்பந்தப்பட்ட மாணவனிடமும் அவனின் பெற்றோரிடமும் விசாரித்தேன்.

தலைமை ஆசிரியை ஃப்ளோராலீவ் லெட்டர் எழுதிய மாணவனை, இந்தப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் சில மாணவர்கள் சேர்ந்து கொரோனா வைரஸ் லீவ் லெட்டரை எழுதச் சொல்லியுள்ளனர். 

அப்போது, லீவ் லெட்டர் எழுதிய மாணவனை, இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் சில மாணவர்கள் சேர்ந்து கொரோனா வைரஸ் லீவ் லெட்டரை எழுதச் சொல்லியுள்ளனர். பின்னர், அந்த லெட்டரை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் பதிவேற்றியுள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு வந்து மன்னிப்பு கேட்டனர். அதோடு, மாணவனின் அம்மா, இனிமேல் தன்னுடைய மகன் இதுபோன்ற தவற்றை செய்ய மாட்டான் என்றும் கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார்.



மாணவன், கொரோனா வைரஸ் இருப்பதாகக் கூறி கடிதம் எழுதியுள்ளதால், அவனின் உடல் நலத்தை செக்-அப் செய்து டாக்டரிடமிருந்து சான்றிதழ் வாங்கிவரும்படி பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் இன்று லீவ் லெட்டர் எழுதிய மாணவன் பள்ளிக்கு வரவில்லை" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent