இந்த வலைப்பதிவில் தேடு

கொரோனா - பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் - அரசு சுற்றறிக்கை

செவ்வாய், 10 மார்ச், 2020



நேற்றுவரை கொரோனா பாதிப்பு வெறும் 6 ஆக இருந்த நிலையில், தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது.



இந்நிலையில் கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் அனைத்து மாநிலங்களுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இருமல், தும்மல் போன்றவை ஏற்படும்போது கை குட்டையை பயன்படுத்துதல் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 



காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் பள்ளி, பொது இடங்களுக்கு செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அந்த மாநில அரசுகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி கை கழுவுதல், தும்மல் ஏற்படும் நேரத்தில் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்த வேண்டும்.

முழுநீள கை சட்டையை அணியவேண்டும். தொற்றுக்கள் பரவாவண்ணம் இருப்பதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent