சாப்பிட்டீங்களா miss?
உங்க lunch bag கொடுங்க நான் எடுத்துகிறேன்.👣👣👣
miss! ரம்யா உங்களுக்கு ரோஸ் கொண்டுவந்திருக்க.😍
மிஸ்! இந்த saree உங்களுக்கு அழகா இருக்கு!
🤩
ஏய்! மிஸ்ஸே அழகாத்தாண்டி இருக்காங்க..😀
மிஸ்! ரியாஸ் நேற்று ஸ்கூலுக்கு வரல, அவனை என்னான்னு கேளுங்க மிஸ்...😉
மிஸ்! அதான்..அதான் ..எங்க அம்மாதான் எங்க ஆயா ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. நான் மாட்டேன்னுதான் சொன்னேன் மிஸ் அப்போகூட கூட்டிட்டு போய்ட்டாங்க மிஸ்...😥
மிஸ்! நீங்க நேத்து சொன்ன project பிரியா முடிக்கல ..
மிஸ்! யார் யார் home work முடிக்கலன்னு பார்க்கட்டுமா மிஸ்..
மிஸ்...! இவன் என்னை கிள்ளிட்டான் மிஸ் இங்க பாருங்க 😥
மிஸ்! முரளி ஷானாஸை அடிச்சிட்டான் மிஸ்.. boys யாருமே girls அடிக்க கூடாது திட்ட கூடாது மரியாதையா நடந்துக்கணும்னு நீங்க சொன்னிங்கதானே மிஸ்...அப்பகூட அவன் அடிச்சிட்டான் மிஸ்..
மிஸ்! உங்களுக்கு எங்கம்மா lunch குடுத்தாங்க மிஸ்...
(வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பே இத்தனை ஆர்பாட்டமும்)
அப்பப்ப.... அடுக்கி கொண்டே போகலாம்..
இப்படி எத்தனை மிஸ்களை (miss) பண்றேன்.
வெறிச்சோடிய வகுப்பறையில் என் தனிமைக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது இவையெல்லாம்..
நச்சரிப்பாய் நினைக்கும் அன்பு தொல்லைகள் தீடிரென்று ஒரு நாள் காணாமல் போகும்போதுதான் அது விலை மதிப்பற்றது என்று புரிகிறது.
நன்றி கொரோனா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக