இந்த வலைப்பதிவில் தேடு

`கடவுளால் மட்டுமே இப்போது எங்களை மீட்க முடியும்!' - இத்தாலி பிரதமர் அழுதது உண்மையா?

வியாழன், 26 மார்ச், 2020



``நாங்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டோம், கடவுளால் மட்டுமே இப்போது எங்களை மீட்க முடியும்” - இத்தாலி பிரதமர், கியூசெப் காண்டே அழுகிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.


`இத்தாலியில் 5,000-க்கும் அதிகமான இறப்புகள் மற்றும் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் இத்தாலிய நாட்டின் பிரதமர் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறார்' என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.


விகடன் பேக்ட் செக் குழு இந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தது.

இந்தப் புகைப்படத்தை பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

நமது குழு தேடியதில், அந்தப் புகைப்படத்தில் அழும் நபர் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ.


போல்சனாரோ தனது அலுவலகத்தில் நடந்த ஒரு `நன்றி' நிகழ்வின்போது, 2018-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் அவர் சந்தித்த கத்தி தாக்குதலை நினைவுகூரும்போது அவர் உடைந்து அழுதார்.


இத்தாலி பிரதமர் கியூசெப் காண்டே, தனது நாட்டில் கோவிட் -19 இறப்பு தொடர்பாக உடைந்து அழுததாகக் கூறப்படுவது போன்ற எந்த நிகழ்வும் குறித்த நம்பகமான செய்தி எதுவும் எங்கள் குழுவால் கண்டறிய முடியவில்லை.



சமூக வலைதளங்களில் பகிரப்படும் அழும் நபரின் புகைப்படத்தில் இருப்பவர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ; மாறாக இத்தாலியப் பிரதமர் கியூசெப் காண்டே அல்ல என்று நாம் கூறலாம். மேலும், இந்தப் புகைப்படம் படம் சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்துக்கு கொரோனா செய்திகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent