இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்களின் ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்!

வியாழன், 26 மார்ச், 2020



ஆசிரியர்களுக்கான ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் அடுத்த 3 வாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது .

இதையடுத்து தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்கள் , தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள் 3 வாரம் மூடப்பட்டிருக்கும் . துறை அதிகாரி கள் மற்றும் பணியாளர்கள் வீடுகளில் இருந்தவாறு பணியாற்றுவார்கள் .

மேலும் , துறைசார்ந்த அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது .

இதேபோல் , ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான மார்ச் மாத ஊதியம் , ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படுவதை யும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் உறுதி செய்ய வேண்டும் .

மேலும் , தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம்  என்சிஇ ஆர்டி நடப்பு கல்வியாண்டுக்கான மாற்று நாள்காட்டியை விரை வாக வெளியிடவும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளதாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent