இந்த வலைப்பதிவில் தேடு

SBI வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வியாழன், 12 மார்ச், 2020



இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் ரஜ்னீஷ்குமார் அறிவித்துள்ளார். அதேபோல் எஸ்.எம்.எஸ் கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளது.



இதற்கு முன்பு எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டது. நகர்ப்புறங்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 முதல் 5000 வரை குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும். 

பெருநகரமல்லாத பகுதிகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்பாக 2,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். அதேபோல, கிராமப் பகுதிகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குறைந்தபட்ச இருப்புத் தொகை குறிப்பிட்ட சதவிகிதம் குறைந்தால் 5 முதல் 15 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதிலும் அந்தப்பகுதிகளுக்கு ஏற்ப அபராதம் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது எஸ்.பி.ஐ. இந்த நிலையில்தான் தற்போது வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.



இதுகுறித்து பேசியுள்ள எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் ரஜ்னீஷ்குமார், ``இந்த அறிவிப்பானது எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், புன்னகையும் தரும். இந்த முயற்சியானது வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent