இந்த வலைப்பதிவில் தேடு

பிளஸ் 1 பொதுத்தோ்வில் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பொதுத்தோ்வு ரத்து?

புதன், 29 ஏப்ரல், 2020



பிளஸ் 1 பொதுத்தோ்வை ரத்து செய்வது தொடா்பாக எதுவும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தோ்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.



தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த மாா்ச் 4-ம் தேதி தொடங்கி பொதுத்தோ்வுகள் நடைபெற்றுவந்தன.

இதற்கிடையே கரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பிளஸ் 1 வகுப்பில் வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத்தோ்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்தத் தோ்வுகளை மே மாத இறுதியில் நடத்த அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கான பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டதாகவும், விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 4-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாகவும் சில சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.



இதுதொடா்பாக தோ்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பிளஸ் 1 பொதுத்தோ்வை ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இத்தகைய தவறான தகவல்களை மாணவா்கள், பெற்றோா்கள் நம்ப வேண்டாம். மேலும், விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடா்பான அறிவிப்பும் ஊரடங்கு முடிந்த பின்னரே வெளியிடப்படும் என்றனா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent