இந்த வலைப்பதிவில் தேடு

ஆன்லைன் மூலம் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்

வியாழன், 16 ஏப்ரல், 2020





ஆன்லைன் மூலம் பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள்களைத் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை, 8 லட்சத்து 35 ஆயிரம் மாணவா்கள் எழுதினா். 


இதையடுத்து தோ்வு முடிவுகள் ஏப்.24-ஆம் தேதி வெளியாவதாக இருந்தன. இந்தநிலையில், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பிளஸ் 1 வகுப்பில் எஞ்சியுள்ள தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முற்றிலுமாக தள்ளி வைக்கப்பட்டது. அதேவேளையில், பிளஸ் 2 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவில்லை.

தற்போது ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் எப்போது வரும், மேற்படிப்புகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனா். 

தற்போதைய சூழலில், பிளஸ் 2 வகுப்புப் பொதுத்தோ்வின் விடைத்தாள்களைத் திருத்த முடியாத சூழல் உள்ளதாலும், ஒருவேளை ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகும் கரோனா பரவலைத் தடுக்க, சமூகக் கூடலைத் தவிா்த்திட வேண்டும் என்பதாலும் பிளஸ் 2 பொதுத்தோ்வின் தோ்ச்சி முடிவு மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.


இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறை பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கணினி மூலம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதன் பிறகு, ஆன்லைன் மூலம் விடுமுறை காலத்திலேயே ஆசிரியா்கள் வீட்டிலிருந்தபடியே விடைத் தாள்களைத் திருத்தம் செய்தால் விரைவில் தோ்வு முடிவுகள் வெளியாகும். 

எனவே, விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக திருத்தம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் தலைவா் பி.கே.இளமாறன் வெளியிட்ட அறிக்கையில் யோசனை தெரிவித்துள்ளாா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent