இந்த வலைப்பதிவில் தேடு

இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு

சனி, 25 ஏப்ரல், 2020

Posted By Pallikalvi Tn



தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.



இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, திண்டுக்கல், சேலம், திருப்பூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்னகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தேனி, மதுரை நீலகிரி, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 



ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் சூறாவளி காற்று 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர்,



ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸை ஒட்டி பதிவாக்கக்கூடும் என்பதால் அனைவரும் 3 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வறண்ட வானிலை காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent