இந்த வலைப்பதிவில் தேடு

AC உபயோகம் செய்பவர்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

சனி, 6 ஜூன், 2020



1) ஏசி ஒரு ஈரப்பதமகற்றி (Dehumidifier)! ஆதலால் , ஏசி அறையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் ,ஏசி அறையினுள் உறங்குபவர்கள் , அவ்வபொழுது தண்ணீர் அருந்த வேண்டும்!



இல்லை என்றால் , உடம்பினுள் இருக்கும் , தண்ணீரை வற்றி போக செய்து விடும் இந்த ஏசி! பின் கட்டி சளியினால் அவதி , கழுதை , குதிரை என்று அனைத்தும் வண்டி கட்டி கொண்டு ஓடி வந்து , நம் உயிரை வாங்கும்!சளி பற்றி அறிய இங்கே சொடுக்கவும்!



மேலே உள்ள படத்தில் , நம் அறையின் ஈரம் எவ்வாறு உறிஞ்சப்பட்டு , தண்ணீராய் வடிகிறது பாருங்கள்!



2) என்னதான் , ஏசி அறையினுள் உறங்குவது , வேலை செய்வது எல்லாம் சுகமாக இருந்தாலும் , அவ்வப்பொழுது ஏசியின் காற்று வடிகட்டியை(Air Filter),இரண்டு வாரங்களுக்கு , ஒரு முறையாவது , தண்ணீரை கொண்டு , சுத்தம் செய்வது சாலச் சிறந்தது! 



இதனால் , ஆஸ்துமா போன்ற வியாதிகள் வராமல் தடுத்து கொள்ளலாம்! மேலும் , தூசி அடைப்புகளை , கண்டு கொள்ளாமல் , விட்டு விடுவீர்களாயின் , அறையை குளிரூட்ட , அமுக்கி அதிகமாய் வேலை செய்து , மின்சார பில்லை எகிற வைத்து , நம் இதயத்தை பதம் பார்த்து விடும் ஜாக்கிரதை!

3)​ஏசியின் உள்ளே இருக்கும் குளிர்பதன வாயு , நான்கு வருடங்கள் தொடர்ந்து உழைத்த பின்னே , படிப்படியாக தீர்ந்து விடும்! அதன் பின்னே , புதிதாக குளிர்பதன வாயுவை நிரப்ப வேண்டியது அவசியம்!



4) ஏசி அறைகளில் , எதையும் எரிக்க கூடாது! ஏனெனில் , ஒரு பொருள் ஏசி அறைகளில் , எரியும் போது , அது அந்த அறையில் இருக்கும் ஆக்சிஜனை விரைவில் காலி செய்து விடும்! நாலைந்து மனிதர்கள் , ஒரு பூட்டிய ஏசி அறையில் உறங்கும் போது கூட , அவ்வளவு விரைவாக , ஆக்சிஜன் காலி ஆவதில்லை! ஆனால் , நெடு நேரம் , நாலைந்து மனிதர்கள் , ஒரு பூட்டிய, சிறிய  ஏசி அறையில் ,  இருக்கும் போது , கண்டிப்பாக , அவர்களின் உடல் நலம் கெடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை!



5) ஏசியை போட்டு விட்டு காருக்குள் தூங்குபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! அவ்வப்பொழுது , ஏசியின் ஆவியாக்கியையும் ,கார் இன்ஜினின் , வெளிப்படுத்துகுழாயையும் (Exhaust pipe) , எந்த கசிவும் (Leakage) இல்லாமல் இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்! இல்லையேல் , முன்னே சொன்னது போல , ஏசியின் ஆவியாக்கி வழியாக , கார்பன் மோனாக்சைட் வெளிவந்து , சத்தம் இல்லாமல் , தூங்கும் ஆளை காலி செய்து விடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent