இந்த வலைப்பதிவில் தேடு

கொரோனா - முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

வியாழன், 2 ஏப்ரல், 2020



கொரோனா நோய் தொற்று ஏற்படாமல், முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்கு, பொதுமக்கள், இந்திய பாரம்பரிய மருத்துவ முறையை கையாளலாம் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.



* கபசுரக் குடிநீரை ஐந்து நாட்கள், தொடர்ந்து அருந்த வேண்டும். காலை உணவுக்கு முன், அரை மணி நேர இடைவெளியில், கபசுர குடிநீரை பருக வேண்டும். அதைத் தொடர்ந்து, வாரம் ஒரு முறை அல்லது இரு முறை கபசுரக் குடிநீரை, காலையில் வெறும் வயிற்றில் பருகுவது சிறந்தது.

* துாதுவளை, இஞ்சி, மிளகு, மஞ்சள், பூண்டு மற்றும் சீரகம் ஆகியவற்றை, எந்தெந்த வகைகளில் எல்லாம் உணவில் சேர்க்க முடியுமோ, அவற்றையெல்லாம் சேர்த்துக் கொள்வது, உடல் நலனுக்கு மிகவும் சிறந்தது

* காலையில் இஞ்சி கலந்த தேநீர் அருந்துவது நல்லது. மதியம் வேப்பம்பூ ரசம் சாப்பிட வேண்டும். பிஞ்சு நாட்டு கத்தரிக்காய் குழம்பையும், மதிய உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்



* சாப்பிடும் முன், அரை தேக்கரண்டி அளவுக்கு சுக்குப் பொடியை, உணவின் முதல் பிடியில் கலந்து சாப்பிடலாம். தேவைப்பட்டால், நெய் சேர்த்துக் கொள்ளலாம்

* இரவில் கடுக்காய் பொடியை, அரை டம்ளர் வெந்நீரில் கலந்து குடிப்பது நல்லது. மாலையில் துாதுவளை சூப் மற்றும் முசுமுசுக்கை அடை சாப்பிடலாம். இந்த உணவு முறையானது, கொரோனா வைரசை ஒழிப்பதற்கோ, வைரஸ் தாக்காது என்பதற்கோ கிடையாது. ஒருவேளை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் கூட, உடலுக்கு அதிக தீங்கின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அதில் இருந்து எளிதாக மீள முடியும்.


குழந்தைகளுக்கு உணவு



சிறு குழந்தைகளுக்கு, பாரம்பரிய மருத்துவ உணவு முறைகள் பிடிக்காவிட்டால், வேறு வகைகளில், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை கலந்த, திரிகடுகு சூரணத்தை கால் தேக்கரண்டிக்கும் குறைவாக எடுத்து, அதில் தேன் கலந்து, காலை உணவுக்கு பின், குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. இதை ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்த பின், வாரம் இருமுறை மட்டுமே வழங்க வேண்டும். கற்பூரவல்லி செடியின் இலையை அரைத்து, அதை சாறு எடுத்து, வாரம் இருமுறை கொடுக்கலாம்.

எங்கே கிடைக்கும்?




பாரம்பரிய உணவு மற்றும் சிகிச்சை முறைகளை, 'உணவே மருந்து; மருந்தே உணவு' என்ற அடிப்படையில் மேற்கொள்ளும்போது, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், மிக எளிதாக நோயை பூரண குணமாக்கலாம். இந்த உணவுமுறைக்கான பொருட்கள், சாதாரண காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகளிலேயே கிடைக்கிறது. அவற்றில் இல்லாத பொருட்களை, நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். கபசுரக் குடிநீர் அரசின் சித்த மருத்துவமனை ஆராய்ச்சி மையம், டாம்ப்கால், இம்காப்ஸ் மருந்தகங்களில் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent