இந்த வலைப்பதிவில் தேடு

வீட்டுக்கடன் பெறுவோருக்கு சில ஆலோசனைகள்

திங்கள், 6 ஏப்ரல், 2020




புதிதாக வீடு கட்டுபவரா நீங்கள்? வீடு கட்டுவதற்கான நிதி, வங்கிக்கடன் போன்ற சில பயனுள்ள ஆலோசனைகள் இதோ...

புதிதாக வீடு கட்டுபவரா நீங்கள்? வீடு கட்டுவதற்கான நிதி, வங்கிக்கடன் போன்ற சில பயனுள்ள ஆலோசனைகள் இதோ...

வீடு கட்டும் இடத்தை தேர்வு செய்யும் முன் தொழில், சூழ்நிலை, வருமானம், எதிர்கால தேவை போன்றவற்றை கருத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும். வீடு கட்ட தேவையான நிதியை சேமிப்பு நிதியில் இருந்து எடுத்துக்கொள்வதா, வங்கிக் கடன் பெறுவதா? என்று முடிவு செய்யவேண்டும்.


சேமிப்பு நிதியில் இருந்து வீடு கட்டுவோர் தம்மிடம் உள்ள தொகைக் கும், தமது தேவைக்கும் போதுமான இடத்தில் தம் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வீடு கட்ட வேண்டும். வீடு கட்டும் முன் எவ்வளவு செலவுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று முன்பே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். வீடு கட்டும் முன் ஒரு சிறந்த கட்டிட பொறியாளரின் ஆலோசனையை பெற வேண்டும். நமக்கு மட்டுமின்றி எதிர்காலத்தில் நம் சந்ததியினருக்கும் உதவக்கூடிய வீட்டை சிறந்த முறையில் கட்ட திட்டமிடவேண்டும். கடன் வாங்கி வீடுகட்டுவோர்: முதலில் தம்முடைய கடன் தேவை எவ்வளவு என்று கணக்கிட வேண்டும். அதேபோல் வங்கி கடனை எத்தனை ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.

அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்று வோர் அல்லது சொந்த தொழில் செய்வோர் (வருமான வரி செலுத்துபவர்கள்) மட்டுமே கடன் பெற முடியும். குறைந்த வட்டியில் தகுதியான நிறுவனத்தில் கடனை பெற முடிவு செய்ய வேண்டும். வீடு கட்டும் இடம் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபர் பெயரிலோ, அல்லது அவரது மனை வியின் பெயரிலோ இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கடனை திருப்பிச் செலுத்தும் கால அளவு, அவருடைய வயது, வருமானம் இவற்றை வைத்து முடிவு செய்யப்படும். அதிகபட்சமாக வீடு கட்ட, அல்லது கட்டிய வீடு வாங்குவதற்கு, அதனுடைய ஒட்டுமொத்த செலவில் 85 சதவீதம் மட்டுமே கடன் பெறமுடியும். எனவே, மீதியுள்ள தொகையை முதலில் முதலீடு செய்து வீட்டு வேலையை தொடங்க வேண்டும்.

கடன் வாங்கிய பிறகு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் இருப்ப வர்கள், தங்களுடைய வேலையில் இருந்து ஓய்வு பெறும் முன்கடனை முடிக்க தீர்மானிக்கவேண்டும். தொழில் புரிவோர் குறுகிய காலத் திற்குள் கடனை அடைக்க முயற்சிக்க வேண்டும். நம்மிடம் மொத்தமாக பணம் கிடைக்கும்போது கடனை திருப்பிச் செலுத்தும் முறையில் வங்கியில் வீட்டுக்கடன் பெற வேண்டும்.

கடனை செலுத்தும்போது மீதி வரும் கடன் தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கிடும் முறையில் வங்கியில் கடன் பெற வேண்டும். கடன் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக அதிக தொகையை வாங்கிவிடக் கூடாது. தேவைக்கு ஏற்ப மட்டுமே கடன் வாங்க வேண் டும். அப்போது தான் கடனை எளிதாக திருப்பி செலுத்த முடியும். அதனால் நாம் நம்முடைய வருமானத்தில் 35 சதவீதத்தை மட்டுமே கடனாக திருப்பி செலுத்தும் தொகையாக பார்த்துக் கொண்டு அதற்கேற்ப கடன் வாங்க வேண்டும். இவற்றை கவனத்தில் கொண்டால் சிறந்த முறையில் வீடு கட்டி பயன்பெறலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent