இந்த வலைப்பதிவில் தேடு

கொரோனாவின் சில நன்மைகள்

சனி, 4 ஏப்ரல், 2020







சுத்தமாகும் நீர்நிலைகள், மாசு குறைகிறது

மக்கள் மத்தியில் இரக்க குணம், மக்களிடையே ஒற்றுமை


1. எந்த மருத்துவமனையிலும் 1 ஆள் கூட தலைவலி, காய்ச்சல், கை.கால் வலி என்று நோயாளியாய் இல்லை.. மருத்துவமனை வெறிச்சோடிக் கிடக்கிறது.. ஏனென்றால் கொரோனா பயத்தில் மற்றவை பறந்துவிட்டது. மருத்துவமனைகளால் எவ்வளவு பணத்தை வீணாக இழந்துள்ளோம்

2. சரவண பவனில் 1 Spl சாப்பாடு 150 சாப்பிட்ட நாம் இன்று அதே பணத்தில் 2 நாள் குடும்பத்துடன் சாப்பிட்டு சிக்கனமாய் இருக்கிறோம்

3. எந்த துணிக்கடையிலும் துணியெடுக்க ஆசை இல்லை

4. எந்த நகை கடையிலும் நகை வாங்கும் எண்ணமில்லை

5. எந்த செலவும் கிடையாது கார், பைக், மொய் செலவு, அலைச்சல் எதுவும் இல்லாமல் வாழ்கிறோம்.

6. நம் குடும்ப உறுப்பினர்கள் மீதும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நண்பர்களிடமும் சொந்தங்கள் மீது இப்போழுது பாசம் அதிகரித்துள்ளது

7. யாருக்கும் இப்போது பணியின் காரணமாக மன அழுத்தம் இல்லை. வேலை பார்க்க மனம் துடிக்கிறது

8. மதவெறி, ஜாதி வெறி, பணவெறி, அரசியல்வெறி எல்லா வெறியையும் கொரோனா தூக்கி எறியச்செய்து விட்டது,

9. தொலைபேசி,fb Whatapp மூலம் எல்லோரும் எந்த நேரமும் Online ல் உள்ளோம் எந்நேரமும் சொந்த பந்தங்களிடம் உறவுகளை புதுப்பித்துக் கொண்டு உள்ளோம்

10. எல்லோரும் மனத்தெளிவுடன் உள்ளோம். மனம் தூய்மை அடைந்துள்ளது. பகை மறக்கப்பட்டது

11. பணம் ஒரு விஷயமே இல்லை. பணத்தால் ஒன்றும் செய்ய முடியாது. நோய் இல்லாத வாழ்க்கையே வாழ்க்கை என்கிற உண்மை புரிந்து விட்டது,

12. சுற்றுலா செல்லவும் முடியாது பணத்தை காலி செய்யும் எந்த மால்களுக்கும் செல்ல முடியாது

மொத்தத்தில் கொரோனாவால் எதிர்மறையாக சில நன்மைகளும் நடந்துள்ளன. நன்றி.. ஆசிரியர் அகஸ்டஸ் ஜாண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent