இந்த வலைப்பதிவில் தேடு

கொரோனாவுக்கு அரசு பள்ளி தலைமையாசிரியர் பலி - உடல் நல் அடக்கம்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மதுரையைச் சேர்ந்த நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.



டில்லியில் நடைபெற்ற, தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற, விழுப்புரம், சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த, 51 வயது நபர் அடையாளம் காணப்பட்டார். அவருக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது ரத்த மாதிரியை சோதனைக்கு அனுப்பியதில், கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதியானது. இதனால், தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்தது. நேற்று முன்தினம் இரவு, அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், நேற்று காலை, 7:40 மணிக்கு இறந்தார்.



டாக்டர்கள் உரிய பாதுகாப்பு கவசங்களுடன், பிரேத பரிசோதனை செய்தனர். போலீசார் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, விராட்டிக்குப்பத்தில் உள்ள, கபகஸ்தானுக்கு என, அழைக்கப்படும் சுடுகாடுக்கு, சடலத்தை கொண்டு சென்றனர். பின், உறவினர்கள் முன்னிலையில், இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த நபர், அரசு பள்ளி தலைமை ஆசிரியர். தமிழகத்தில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த, இரண்டாவது நபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent