பவானி அருகே, ஊரடங்கை மீறிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை உட்பட ஏழு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள குறிச்சி, வாய்க்கால் மேட்டைச் சேர்ந்தவர் ராணி, 42; அம்மாபேட்டை, செல்லிகவுண்டனுார் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை. இவரது கணவர், பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில், தலைமை காவலர்.
ராணி, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, 56, உள்ளிட்ட ஏழு பேருடன், பவானி அருகே, பெரிய குரும்பம்பாளையம் காலனிக்கு, ஒரு வாகனத்தில், நேற்று முன்தினம் சென்று, மத பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், வாகனத்தை சிறைபிடித்து, பவானி போலீசாருக்கு தகவல் தந்தனர். போலீசார், ராணி உட்பட ஏழு பேர் மீதும், வழக்குப்பதிவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக