இந்த வலைப்பதிவில் தேடு

அறிவியல் பார்வையில் "காதல்" என்பது என்ன?

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020




காதல் அழகானது ! இதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது ஒரு உன்னதமான உணர்வு என்று! இந்த அற்புதமான உணர்வு தான் நம் உலகத்தை இன்னும் கட்டி காத்து கொண்டு வருகிறது! இந்த காதல் ஏன் , எப்படி , எதற்கு வருகிறது என்று சற்றே விரிவாக நோக்கலாம்..



உளவியலாளர்கள்(Psychologists ) என்ன சொல்கிறார்கள் தெரியுமா?? ஒருவற்கு தன் எதிர்பாலினரை பார்த்தவுடன் அவரை காதலிக்கலாமா இல்லை வேண்டாமா என்று தீர்மானிக்க 90 வினாடிகளில் இருந்து 4 நிமிஷம் போதுமாம் !நாம் ஒருவரிடம் சென்று நம் காதலை சொல்லும் போது , 7% காதல் நாம் என்ன பேசினோம் என்பதை பொறுத்து வருகின்றதாம். 55% காதல் , நம் உடல் மொழியை கவனித்து வருகின்றதாம். மேலும் , 38% காதல் , நம் குரல் , அது ஒலிக்கும் தொனி இவற்றை பொறுத்து வருகிறதாம்! இது எப்படி இருக்கு !


காதல் வயப்படுவதை மொத்தம் மூன்று நிலைகளாக பிரித்து இருக்கின்றனர்..

1)இச்சை கொள்வது

2)ஈர்ப்பு கொள்வது

3)இணைந்து கொள்வது



ஒவ்வொரு நிலையிலும் , நம் உடம்பில் , அந்த நிலைக்கு தக்கவாறு , வெவ்வேறு ஊக்கிகள்(Hormones ) , நம் உடம்பில் சுரக்கின்றனவாம்!

1)இச்சை கொள்வது

இது தான் காதலின் முதல் நிலை. இந்த நிலையில், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோனும்(Testosterone), பெண்களுக்கு ஈத்திரோசனும்(Oestrogen) சுரக்கின்றன.


2)ஈர்ப்பு கொள்வது

இது தான் காதலின் இரண்டாம் நிலை. இது காதலால் தாக்கப்பட்ட ஒரு நிலை… நம்மை சுற்றி நடக்கும் எல்லாமே ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கும். உலகம் அழகாகத் தெரியும்! மூன்று வகையான நியூரோடிரான்ஸ்மிட்டர்கள்  (NeuroTransmitter) இதற்கு காரணமாக இருக்கின்றன . அவை , அட்ரினலின் (Adrenalin), டோபமைன்(Dopamine ) மற்றும் செரோடோனின் (Serotonin ).


அட்ரினலின்

ஒருவரை பார்த்து , அவரின் மேல் இச்சை கொண்டு , காதலில் விழுந்த பின்னே , நீங்கள் அடிக்கடி வியர்த்து விறுவிறுத்து போவீர்கள் . உங்கள் இதயம் எக்கு தப்பாக , வேக வேகமாக துடிக்கும். உங்கள் வாய் அடிக்கடி உலர்ந்து போகும். இதற்கு எல்லாம் முழு காரணகர்த்த இந்த அட்ரினலின் தான்!



டோபமைன்

காதலில் விழுந்த ஒரு ஜோடியின் மூளையை ஆராய்ந்தால் , அவர்களுக்கு அதிக அளவில் இந்த நியூரோடிரான்ஸ்மிட்டர் இருப்பது தெரியவரும். இந்த கிளர்ச்சியூட்டும் இரசாயனம் , அவ்விருவருக்கும் இடையே அளவுக்கு அதிகமான இன்பங்களை தூண்டி விடுவதில் பெரும் பங்கு வகிக்கிறது!
இந்த டோபமைனின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது தான் , ஊண் இன்றி , உறக்கம் இன்றி , சதா தங்கள் காதல் பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பர்

செரோடோனின்



கடைசியாக செரோடொனின்.. காதலினை தூண்டும் அதிமுக்கியமான இரசாயனங்களில் இதுவும் ஒன்று! காதலில் விழுந்த பின்னே , உங்களுக்கு தோன்றும் ஒவ்வொரு எண்ணங்களிலும், உங்கள் காதலரோ/காதலியோ ,ஏதாவது ஒரு விதத்தில் சம்மந்தப்பட்டிருப்பார். அடுத்த கட்ட காதலுக்கு தாவ முழுதாய் துணை புரிவது இந்த செரோடோனின் தான் !
brain-in-love-02




3)இணைந்து கொள்வது

இணைபிரியாத பந்தத்தை கொடுப்பது இந்த நிலையில் தான்! உனக்காக நான் , எனக்காக நீ , நமக்காக குழந்தைகள் என்ற நிலையை அடைகின்றனர்! இந்த நிலைக்கு , இரண்டு முக்கியமான ஊக்கிகள் காரணமாகின்றன . அவை , ஆக்ஸிடாஸின்(Oxytocin ) மற்றும் வாசோபிரசின்(Vasopressin ).


ஆக்ஸிடாஸின்



புணர்ச்சி பரவச நிலையின் போது ஆண் , பெண் இருவராலும் வெளியிடப்படும் ஒரு ஆற்றல் மிக்க ஹார்மோன் இது! இது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்தும்! ஆழமான அன்பை இருவருமே உணர ஆரம்பிப்பது இத்தருணங்களில் தான்!




பிறந்த குழந்தைக்கும் , தாய்க்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்துவதும் இந்த ஆக்ஸிடாஸின் தான்! இது குழந்தையை தாய் பெற்றெடுக்கும் தருவாயில் உடம்பினுள்ளே இந்த ஊக்கியானது வெளியிடப்படுகிறது! குழந்தையை பார்த்த உடன் அல்லது குழந்தையின் அழுகுரல் கேட்ட உடன் , தாய்ப்பால் சுரந்து வழிவது இந்த ஊக்கியால் தான்!



வாசோபிரசின்



இதுவும் காதலில் வெளிப்படுத்தப்படும் ஒரு முக்கியமான ஊக்கிதான் ! இது காதலில் கனிந்து உருகும் தம்பதிகள், கொண்ட புணர்ச்சிக்கு பின்னே வெளியிடப்படும் ஒரு ஊக்கி! இருவருக்கும் இடையில் இருக்கும் பந்தம் , வாழ்வின் கடைசி அத்தியாயம் வரையிலும், இதே போல அழகாக , எந்த களங்கமும் இன்றி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து செயல்பட வைப்பதே இந்த ஊக்கியின் தலையாய வேலை!
images (10)

இதை ஆர்வமுடன் படித்து ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent