அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் காலை 6 மணி முதல் 1 மணிவரை மட்டுமே
* விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
* முதலமைச்சர் எச்சரிக்கை
* "அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மதத்தலைவர்கள் ஒப்புதல்"
* மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க முதலமைச்சர் வேண்டுகோள்
* நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுரை
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் அத்தியவாசியப் பொருள்கள் வாங்குவதற்கான நேரத்தில் முதல்வர் சில மாற்றங்களை அறிவித்திருக்கிறார். அதன்படி, இனி மளிகைக்கடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும். முன்னதாக காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும் முதல்வர், ``கொரோனா வைரஸ் அனைவரும் தாக்க வல்லது. அதனால் மதச் சாயம் பூசுவதை தவிர்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மக்கள் நேரக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக