இந்த வலைப்பதிவில் தேடு

கொரோனா இருப்பவர்கள் அருகில் இருந்தால் ‘அலார்ட்’ செய்யும் புதிய செயலி அறிமுகம்!

வெள்ளி, 3 ஏப்ரல், 2020



கொரோனா இருப்பவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள வசதியாக புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆகவே கொரோனா மேலும் பரவமால் இருக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.


முன்னதாக கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், ஆப்பிள், கூகுள், உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயலிகளை உருவாக்கியது. அத்துடன் சில மாநிலங்களும் கொரோனா விழிப்புணர்வு செயலியை உருவாக்கியது. இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை, சுகாதாரத் துறை இணைந்து ஆரோக்யா சேது என்ற செயலியை உருவாக்கியுள்ளது.


சோதனைக்காக கொரோனா கவச் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலிக்கு, தற்போது ஆரோக்யா சேது என பெயரிட்டு மத்திய அரசு அதிகாரப்பூவர்மாக அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம், நமது உடல்நிலை குறித்த தகவல்களை அளித்தால், நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிந்துகொள்ளலாம்.


 முக்கியமாக கொரோனா பாதிக்கப்பட்ட நபரோ, தனிமைப்படுத்தப்பட்ட நபரோ நமது அருகில் இருந்தால், உடனடியாக இந்த செயலி நம்மை எச்சரிக்கை செய்யும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் மூலம் செயல்படும் இந்த ஆரோக்யா சேது செயலி, 11 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. நாம் அளிக்கும் பெயர், தொலைபேசி எண் போன்ற தகவல்கள் மத்திய அரசை தவிர வேறு யாருக்கும் இந்த செயலி தெரியப்படுத்தாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent