இந்த வலைப்பதிவில் தேடு

இவர் மாதிரி ஆட்சித்தலைவர் அமைந்தது இந்த மாவட்டத்திற்கு வரம்

வியாழன், 16 ஏப்ரல், 2020



கலெக்டரின் கார் கிரிவலப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறது . இரண்டு பக்கமும் கூர்ந்து பார்த்துக் கொண்டு வரும் கலெக்டர் பார்வையில் அந்த காட்சி தென்படுகிறது .

வயதான பெண்மணி ஒருவர் தனியாக சாலை ஓரத்தில் அமர்ந்திருக்கிறார் .

அங்கு காரை நிறுத்த சொல்கிறார் கலெக்டர் . காரில் இருந்து இறங்கி அந்த பெண்மணியிடம் சென்று அக்கறையோடு நலம் விசாரிக்கிறார் .



அப்போது அந்த பெண்மணி கண்ணீரோடு தனது பெயரை மட்டும் சொல்கிறார் .அதற்கு மேல் அந்த பெண்மணியால் பேச முடியவில்லை .அந்த பெண்மணியின் ஆதரவற்ற நிலையை புரிந்து கொள்கிறார் கலெக்டர் .

அப்போதே தனது காரில் ஏற்றிக் கொள்கிறார் .அங்கிருந்து கார் சிறப்பு முகாமிற்கு செல்கிறது .

அங்கு அந்த பெண்மணிக்கு தலையணை , தரை விரிப்பு , போர்வை , சோப்பு , பேஸ்ட் , பிரஷ் ஆகியவற்றை வழங்கி மேலும் சிறப்பு முகாமில் தங்கியுள்ள அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உடனடி ஏற்பாடு செய்தார் .


நெருக்கடியான சூழ்நிலையில் திருவண்ணாமலைக்கு நல்லதொரு மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு கந்தசாமி அவர்கள் அமைந்தது வரம்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent