இந்த வலைப்பதிவில் தேடு

யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டாம் தெரியுமா?

வியாழன், 23 ஏப்ரல், 2020



மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் வருமான வரி விலக்கு உச்ச வரம்புக்குள் வருவாய் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டாம் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் மட்டும் அல்லாமல், மேலும் சிலரும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவார்கள். 60 வயதுக்குள் இருக்கும் தனிநபர், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டினால் அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.



அதாவது, 60 வயதுக்குள் இருக்கும் தனிநபர், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டினால் அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம் வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சபட்ச தொகை ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒருவர் ரூ.5 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டினால், அவர் நிச்சயம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதே சமயம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து, அவர் தனது ஊதியத்துக்கு செலுத்திய வரியை முழுவதுமாக திரும்பப் பெற முடியும். ரூ.5 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டுவோர் நிச்சயம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், 60 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டினால் அவர்கள் மூத்தக் குடிமக்கள் என்ற அடிப்படையில் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்குப் பெறுவார்கள். அதேப்போல, 80 வயதுக்கு மேல் இருக்கும் சிறப்பு மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருவாய் ஈட்டினாலும் அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.


மேலும், வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்ச வரம்புக்குள் வருவாய் ஈட்டுவோர், ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்! வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய 2019 ஜூலை 31ம் தேதியே கடைசி நாளாகும். அவ்வாறு ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜூலை 31ம் தேதிக்குள் செலுத்தி விட வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செலுத்தவில்லை என்றால் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்றும் எச்சரித்துள்ளது.


ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்குள் உள்ளவர்கள் வருமான வரிக் கணக்கை ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்து விட வேண்டும். ஒரு வேளை ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.

அதே நேரம், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் ஈட்டுவோர், ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யத் தவறினால், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதிக்குள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்.


அவ்வாறு டிசம்பர் 31ம் தேதி வரையிலும் கூட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent