தமிழகத்தில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்டால், 10ம் வகுப்பு தேர்வு, பிளஸ் 1ல் விடுபட்ட தேர்வுகளை நடத்த வேண்டும்.
பின், விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்; தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்.இந்த பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்பதால், ஜூன் முதல் வாரத்தில், பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டது.
அது சாத்தியமில்லை என்பதால், எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.தற்போது, நிலைமை கட்டுக்குள் வரும் வரை, பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவிலான முடிவுக்கு ஏற்ப, பள்ளி திறப்பை, ஜூன் இறுதி வாரத்துக்கு தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக