இந்த வலைப்பதிவில் தேடு

ஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் தெரியுமா?

செவ்வாய், 23 ஜூன், 2020





கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் மூலம் அது பரவும் அபாயமும் அதிகம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

பொதுவாக ஸ்மார்ட்போன்களில் அதிக கிருமிகள் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் ஆரோக்கியத்துக்கான தேசிய மையம் சார்பில் நடத்தப்பட்ட தற்போதைய ஆய்வொன்றில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் பிளாஸ்டிக், கிளாஸ், கார்டுபோர்டு மீது உயிர்வாழும் என கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் ஸ்டீல் மற்றும் கடுமையான பிளாஸ்டிக் மீது 72 மணி நேரங்கள் ( மூன்று நாட்கள்) கார்டுபோர்டின் மீது 24 மணி நேரத்திற்கும், பித்தளையின் மீது 4 மணி நேரத்திற்கு உயிர்வாழும் என தெரியவந்துள்ளது.


சமீபத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் கிளாஸ் மீது எவ்வளவு காலம் உயிர்வாழும் என கண்டறியப்படவில்லை.

இருப்பினும் முந்தைய ஆய்வின் படி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி அனைத்துவித கிளாஸ் பரப்புக்கும் பொருந்துவதனால் இது 96 மணி நேரம் ( நான்கு நாட்கள்) உயிர்வாழும் என கருத முடியும் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent