இந்த வலைப்பதிவில் தேடு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை கண்டுபிடிக்க கூகுள் அதிரடி திட்டம்

வெள்ளி, 8 மே, 2020



கொரோனா வைரஸ் பரவிய பின்னர் பலருக்கு அதன் அறிகுறிகளே தென்படாமல் மரணம் சம்பவித்துள்ளது.

மேலும் பலர் அதற்கான அறிகுறிகள் இருந்தும் மருத்துவமனைகளை நாடாது இரகசியமாக இருக்கின்றனர்.

இதன் காரணமாக அவர்களுடன் இருப்பவர்களுக்கும் குறித்த வைரஸ் பரவும் அபாயம் காணப்படுகின்றது.



இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களையும் கண்டறிய ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் என்பன ஒன்றாக இணைந்துள்ளன.

இதன் அடிப்படையில் iOS மற்றும் Android சாதனங்களுக்கான Coronavirus Tracking System ஒன்றினை உருவாக்கவுள்ளனர்.

இது பயனர்களின் தொலைபேசி இலக்கங்களுடனா தொடர்பாடலை அடிப்படையாகக் கொண்டு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் கண்டு தகவல் அனுப்பும்.

இவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் சுகாதார துறை மற்றும் மருத்துவத்துறையுடன் பகிரப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent