இந்த வலைப்பதிவில் தேடு

10 வகுப்பு பொதுத்தேர்வு!! - தினமலர் அதிரடி தலையங்கம்

செவ்வாய், 19 மே, 2020



பொதுத் தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு மாணவர்கள், வெளியூர்களில் இருந்து திரும்பி வருவதற்கு, 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பித்து, 'இ - பாஸ்' பெறலாம் என, அரசு தெரிவித்துள்ளது.



'கணினி வசதியே இல்லாதவர்களால், எப்படி பாஸ் வாங்க முடியும்? அப்படியே வாங்கினாலும், தேர்வு எழுதுவதற்காக, வெளியூர் வருபவர்களுக்கு மட்டும், கொரோனாபரவாதா? உத்தரவிடுவதற்கு முன், அரசு யோசிக்க வேண்டாமா?' என, பெற்றோரும்,ஆசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.தமிழகத்தில், மார்ச், 27ல் நடத்தப்பட இருந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பும், ஊரடங்கு கட்டுப்பாடுகளும், இன்னும் முடியாத நிலையில், 10ம் வகுப்பு தேர்வை, ஜூன், 1 முதல், 12ம் தேதி வரை நடத்த, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சொந்த ஊர்கள் மற்றும் கிராமங்களுக்கு சென்றுள்ள மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி, எப்படி பள்ளிக்கு வருவது என, தெரியாமல் தவிக்கின்றனர்.வேலைக்கு தடைசாதாரண மக்களுக்கான, பொது போக்குவரத்து வசதி இல்லை. தினசரி உணவு மற்றும் வாழ்வாதார தேவைகளுக்காக, வேலைக்கும், வியாபாரத்துக்கும் கூட, வெளியூர் செல்லக் கூடாது என, சாதாரண மக்களுக்கு, அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.



அவர்களுக்கு, இ - பாஸ் என்ற, சலுகை கிடையாது.பல நகராட்சி, ஊராட்சி மற்றும் மாநகராட்சிகளில், தொற்று பரவல் அதிகம் உள்ள, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏராளம் உள்ளன. அவற்றில் வசிப்பவர்கள், அடிப்படை தேவைக்கு கூட வெளியே வர முடிவதில்லை. வெளியூர் சென்றால், கொரோனா பரவும் என்று தடை போட்டு விட்டு, தேர்வு எழுதுவோர் மட்டும், இ - பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், தங்கள் பெற்றோருடன், குடும்பம் குடும்பமாக இடம் பெயரும் நிலைமை ஏற்படும். அப்போது மட்டும், கொரோனா பரவாதா என்ற, கேள்வி எழுந்துள்ளது.



சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம் என, பல மாவட்டங்களைச் சேர்ந்த, லட்சக்கணக்கான மாணவர்கள், வேறு மாவட்டங்களில் தங்கி உள்ளனர். அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன், இ - பாஸ் பெறுவது சாத்தியமா என்றும், பெற்றோர் தரப்பில் கேட்கப்படுகிறது.பெரும்பாலான ஊரக பகுதிகளில், இணையதள வசதி இல்லை; கணினி மற்றும் ஸ்மார்ட் போன் வசதியும் இல்லை. பல நேரங்களில் மின் வினியோகம் தடைபடுகிறது என்ற நிலையில் உள்ளவர்கள், இ - பாஸ் பெற விண்ணப்பிக்க முடியுமா என்பதை, அரசு யோசிக்க வேண்டாமா என, பெற்றோர் கொந்தளிக்கின்றனர்.



இதற்கிடையில், மாணவர்கள், இ - பாஸ் விண்ணப்பிக்க உதவுமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பல ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், தங்களின் பணியிடத்திற்கு அப்பால் உள்ள, சொந்த ஊர்களில் உள்ளனர். பல பள்ளிகளில், கணினி வசதி இல்லை. அப்படியே இருந்தாலும், கிராமப் பள்ளிகளில், இணையதள வசதிக்கான, 'சிக்னல்' கிடைப்பது இல்லை. முன்னுக்கு பின் முரண்முக்கிய சாலைகளில், யாரும் செல்ல முடியாத அளவுக்கு, போலீசார், தடுப்புகள் வைத்துள்ளனர்.

இதை சமாளித்து, பணிபுரியும் ஊருக்குள் நுழைவது எப்படி? பள்ளிகளுக்கு செல்ல போக்குவரத்து வசதி கிடைக்குமா? நகரங்களில், ஆட்டோ, கால் டாக்சி போன்ற வாடகை வாகனங்கள் இயக்கப்படுமா?இது போன்று, அடுக்கடுக்கான பிரச்னைகள் எழுகின்றன.இவற்றை எல்லாம் விட, 'கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டு மென்றால், வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்' என, அரசே எச்சரித்து விட்டு, போதிய விழிப்புணர்வு இல்லாத, பள்ளி மாணவர்களை எப்படி பாதுகாப்புடன் வழி நடத்தப் போகிறது எனத் தெரியவில்லை.



மாணவர்களுக்கு, 14 நாள் தனிமை?தமிழக தலைமை செயலர் தரப்பில், மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், 'வேறு மாவட்டங்களில் இருந்து, இ - பாஸ் பெற்று வருபவர்களுக்கு, கொரோனா அறிகுறிகள் இருந்தால், மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனை நடத்த வேண்டும்.'அறிகுறி இல்லாதவர்களை, 14 நாட்கள் கட்டாயம் தனிமைப் படுத்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவுப்படி, 10ம் வகுப்பு தேர்வுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் மாணவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்படுவரா?

அவ்வாறு செய்தால், தேர்வை எங்கே, எப்படி எழுதுவர்? மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட மாட்டார்களா?அவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்றால், அவர்களில் சிலரால் மற்றவர்களுக்கோ, மற்றவர்களால் மாணவர்களுக்கோ, கொரோனா பரவாமல் தடுக்க முடியுமா என்பதை, அதிகாரிகளும், அரசும் யோசிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent