வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் வரும் 21-ம் தேதி நிகழ்கிறது. சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணாலோ அல்லது தொலைநோக்கி மூலம் நேரடியாகவோ பார்க்க வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
சூரிய கிரகணம், ஜூன் 21ல் நிகழ்கிறது. பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன.
இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால் அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்படும்.
ஜூன் 21ல் நிலவு, சூரியனை மத்தியில் மறைப்பதால் சூரியன் வளையம் போன்று தோன்றும். இது "வளைய சூரிய கிரகணம்' என அழைக்கப்படுகிறது.
மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் தெரியும். இந்தியாவில் காலை 9:15 மணிக்கு தொடங்கி, மாலை 3:04 மணிக்கு முடிகிறது. முழு சூரிய கிரகணம் மதியம் 12:10 மணிக்கு தெரியும்.
ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும். மற்ற பகுதிகளில் பாதி சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் 34 சதவீதம் தெரியும். அடுத்த சூரிய கிரகணம் 2020 டிச., 14ல் தோன்றும். வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி, சூரிய கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.
சூரிய கிரகணம் உலகில் முதலாவதாக 9.15.58 மணிக்கு தொடங்குகிறது. முழு கிரகணம் காலை 10.17.48 மணிக்கு தொடங்குகிறது. உச்சக்கட்ட கிரகணம் நண்பகல் 12.10.04 மணிக்கு நிகழ்கிறது. சில பகுதியில் கிரகணம் முடியும் நேரம் மதியம் 14.02.17 மணிக்கு தென்படும். கடைசியாக கிரகணம் முடியும் நேரம் 15.05.01 மணிக்கு முடிவடையும்.
21ஆம் தேதி நிகழும் இந்த கிரகணம் சென்னையில் 10.22 மணி முதல் 11.58 மணி வரை தெரியும். வெறும் கண்களாலோ, பைனாகுலர் மூலமாகவோ இதனை பார்க்கக்கூடாது.
அட்டையில் சூரியனின் பிம்பம்
கிரகணம் நிகழும் பொழுது கிரகணத்தின் வடிவத்திற்கு ஏற்ப நாம் அந்த இமேஜில் இருந்து இந்த கிரகண மாறுவதை நம்மால் பார்க்க முடியும். கண்ணாடியில் ஒரு சென்டி மீட்டர் விட்டம் கொண்ட துளையிட்ட ஒரு அட்டையை ஒட்டி சூரியனுடைய பிம்பத்தை அதில் பிரதிபலிக்கச் செய்து ஒரு இருண்ட அறைக்குள் சுவற்றில் அந்த சூரியனுடைய பிம்பத்தை விழ செய்யலாம் .
திரையில் சூரியன் பிம்பம்
வெல்டர்ஸ் கிளாஸ் மூலம் சூரியனை சில விநாடி நேரங்கள் பார்க்கலாம், அங்கீகரிக்கப்பட்ட சூரிய ஒளி வடிகட்டி கண்ணாடிகள் இருந்தால் அதனைக் கொண்டும் சூரியனே பார்க்கலாம் .பைனாகுலர் அல்லது தொலை நோக்கியை பயன்படுத்தி ஒரு வெண் திரையில் பிம்பத்தை விழ வைத்து பார்க்க வேண்டும்.
பாதுகாப்பாக கிரகணத்தை ரசிங்க
புற ஊதாக் கதிர்கள் விழித்திரை செல்களை பாதிக்கும் என்பதால் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது, சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு கண்ணாடிகள் பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வெறும் கண்ணால் பார்க்க கூடாது, இந்த செயல்பாடுகளுக்கு குழந்தைகளுக்கு பெரியவர்கள் வழிகாட்டியாக இருந்து குழந்தைகளை தொலைநோக்கி பைனாகுலர் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 2031ம் ஆண்டில் தேனியில் முழு சூரிய கிரகணம் அதிகளவில் தெரியும் என்றும் கோளரங்க இயக்குநர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக