இந்த வலைப்பதிவில் தேடு

பேருந்தை ஏறுவதற்காக பார்வையற்றவருக்கு உதவிய பெண் - இன்ப அதிர்ச்சி ஜாய் கொடுத்த ஆலுக்காஸ்

சனி, 18 ஜூலை, 2020








கேரள மாநிலம் திருவல்லாவில் ஜாய் ஆலுக்காஸ் துணிக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார் சுப்ரியா. கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் நிலையில், சுப்ரியா திருவல்லாவில் உள்ள துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பார்வையற்ற நபர் ஒருவர், பேருந்துக்காக காத்திருந்தார். அவருக்கு சரியான பேருந்தை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவரிடம் விசாரித்து, அவர் போக வேண்டிய ஊருக்கு பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக சுப்ரியா அழைத்து வந்தார்.



அப்போது, அந்த பார்வையற்ற நபர் செல்ல வேண்டிய ஊருக்கான பேருந்து வந்ததும், அந்த பேருந்தின் பின்னால் கத்திக்கொண்டே ஓடி, ஒருவழியாக பேருந்தை நிறுத்தினார். பின்னர் நடத்துநரிடம் விவரத்தை கூறி பேருந்தை நிற்கவைத்துவிட்டு, மீண்டும் அந்த பார்வையற்ற நபரிடம் ஓடிச்சென்று, அவரை அழைத்துவந்து பேருந்தில் ஏற்றிவிட்டார் சுப்ரியா. இந்த சம்பவத்தை அப்பகுதிவாசி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதையடுத்து, அந்த வீடியோ செம வைரலானது. அனைத்து தரப்பினரும் சுப்ரியாவை பாராட்டினர்.  பின்னர், திருச்சூரில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு வந்து சந்திக்குமாறு கூறிச் சென்றார்.



அதன்படி, நேற்று முன்தினம் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைமையகம் சென்ற சுப்ரியாவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனிதாபிமானச் செயலுக்கு பரிசாக புதிய வீடு வழங்கப்படும் என்று ஜாய் ஆலுக்காஸ் தெரிவித்தார். இதைக்கேட்ட சுப்ரியா பெரும் மகிழ்ச்சியடைந்தார். இதுகுறித்து தெரிவித்துள்ள சுப்ரியா, என்னை அழைத்து மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார்கள். நூற்றுக்கணக்கான ஊழியர்களின் வாழ்த்துகளால் என் கண்ணில் கண்ணீர் கொட்டியது. ஒரு சாதாரண செயல் என்னை இவ்வளவு பேரின் அன்புக்கு உரியவளாய் மாற்றும் என நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent