இதனால் நமது உடலில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு., எதிர்கால வாழ்க்கையின் முக்கிய பிரச்சனைகளுக்கு இப்போதைய தூக்கமின்மை பெரும் காரணமாக அமைகிறது. இவ்வாறான நிலையில்., பலர் உறங்கும் முறைகளை வைத்தும் அவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது.
தலையணை உபயோகம்:
தூங்கும் சமயத்தில் பெரும்பாலானோர் மென்மையாக உள்ள தலையணையை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதனால் முதுகெலும்பும் வலியானது ஏற்படவும்., கழுத்து வலியும் ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது.
இடது புறமாக உறங்குதல்:
உறங்கும் சமயத்தில் இடது புறமாக உறங்குவதால்., செரிமான உறுப்புக்கள் அனைத்தும் சீராக செயல்பட உதவுகிறது. இதனால் ஜீரண கோளாறு போன்ற பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பில்லாமல் நமது உடலை பாதுகாக்கிறது. இம்முறையில் நமது வலது கைகள் கீழே உள்ளவாக்கில் உறங்க வேண்டும்.
குப்புற படுத்து உறங்குதல்:
இன்றுள்ள பலரும் குப்புற படுத்து உறங்கும் நடவடிக்கையை வைத்திருப்பது வழக்கமாக இருக்கிறது. மேலும்., ஓய்வெடுக்க விரும்புபவர்கள் அனைவரும் குப்புற படுத்து உறங்குவதால் நுரையீரல்., கல்லீரல்., இதயம்., சிறுநீரகம் போன்ற உறுப்புக்கள் அதிகளவு அழுத்தத்திற்கு உள்ளாகி கடுமையான பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக