இந்த வலைப்பதிவில் தேடு

குருபெயர்ச்சி என்றால் என்ன? குருபெயர்ச்சியால் நமக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?

புதன், 11 நவம்பர், 2020







ஜோதிடத்தில் கூறப்படுகின்ற ஒவ்வொன்றும் ஒரு மனிதருக்கு முக்கியமானது. அப்படியென்றால் குருபெயர்ச்சியும் நமக்கு மிக மிக முக்கியமானதே...


குருபெயர்ச்சி என்பது என்ன? குருபெயர்ச்சிக்கு அதிபதியானவர் குருபகவான் ஆவார். இந்த குரு பகவான் ஒரு ராசியில் இருந்து வேறொரு ராசிக்கு சென்று அங்கிருந்து மற்ற ராசிகளை பார்ப்பதை தான் நாம் குருபெயர்ச்சி என்கிறோம். 


அதாவது குரு பகவான் ஒரு ராசியில் இருந்து கொண்டு இன்னொரு ராசியை பார்க்கும் பொழுது அந்த ராசிக்காரர்களுக்கு பல விதமான நன்மைகளை வாரி வழங்குவார்.



குரு பார்வை ஒருவருக்கு பல விதமான பலன்களை கொடுக்கும். அதாவது நீண்ட நாட்களாக வேலை தேடி வருபவருக்கு வேலையை கொடுப்பார். மேலும் அவரை ஆழ்ந்த ஞானம் உள்ளவராக மாற்றுவார். அனைவரிடமும் பாராட்டை பெற வைப்பார்.


மேலும் எடுத்த செயல்கள் அனைத்தையும் வெற்றி அடைய வைப்பார். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வழி வகுப்பார்.



புது புது முயற்சியை எடுக்க வைத்து எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண வைப்பார். குருபெயர்ச்சியின் போது குரு நம் ஜாதகத்தில் எந்த கட்டத்தில் அமர்கிறாரோ அதை வைத்து தான் நன்மை, தீமைகளை சொல்ல முடியும். 


எனவே குருபெயர்ச்சியின் போது கோவிலுக்கு சென்று அர்ச்சனைகள், பூஜைகள் செய்து குருபகவானை வணங்குவதால் நமக்கு நல்லது ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent