இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்திலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இவர்தான்: எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்

திங்கள், 3 மே, 2021

 







திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஐ.பெரியசாமியும், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமாவும் போட்டியிட்டனர். 



வாக்கு எண்ணிக்கை முடிவில் ஐ.பெரியசாமி 1,63,689 வாக்குகளும், திலகபாமா 29,607 வாக்குகளும் பெற்றனர். இதில் ஐ.பெரியசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திலகபாமாவை 1,32,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 



இதனால் திலகபாமா உள்ளிட்ட, ஐ.பெரியசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற அனைத்து கட்சியினரும் டெபாசிட் இழந்தனர். மேலும் ஐ.பெரியசாமி தமிழகத்திலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent